கோடநாடு விவகாரம் : இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் நிறைய இருக்கு!- முதல்வர் பேச்சு!

கோடநாடு விவகாரம் : இதுக்கே பயந்தா எப்படி? இன்னும் நிறைய இருக்கு!- முதல்வர் பேச்சு!

கோடநாடு வழக்கில், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும், அரசியல் தலையீடு, உள்நோக்கம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதாபா காயமடைந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் நேற்று போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இது தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பிய அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெளிநடப்பு செய்த அவர்கள், சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். கோடநாடு சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என அறிவித்திருந்தோம். இதில் அரசியல் தலையீடு இல்லை.கோடநாடு குற்றச்சம்பவங்களில் நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடக்கிறது.

கோடநாடு வழக்கில் அரசியல் தலையீடோ உள்நோக்கமோ இல்லை. விசாரணை நடக்கிறது. அதன் அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் பயப்பட தேவையில்லை, அச்சப்பட தேவையில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும். பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபடவில்லை.தேர்தல் வாக்குறுதிகளில் இது ஒன்று தான் இது. இன்னும் பல உள்ளது .தனிப்பட்ட அரசியல் ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!