Exclusive

சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஷீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஷீரோ’, இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடித்திருக்கிறார். மனோஜ் குமார் காதோ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,‘ஷீரோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாக பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.’ என்றார்.

‘ஷீரோ’ பட அனுபவம் குறித்து நடிகை சன்னி லியோன் பேசுகையில், ‘ஷீரோ’ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷீரோவும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.’ என்றார்.

சன்னி லியோன் கதையின் நாயகியாக அதிரடி ஆக்சன் நாயகியாக நடித்திருக்கும் ‘ஷீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.

aanthai

Recent Posts

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு!

இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.…

1 hour ago

பொம்மை நாயகி பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக…

3 hours ago

‘ஹின்டன்பர்க் அறிக்கை ஒரு நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல!

ஹின்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக அதானி குழுமம் பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஹின்டன்பர்க் தங்களது அறிக்கை தயாரிக்க இரண்டு வருடங்கள்…

3 hours ago

ஒடிசா : சப் இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு

ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். பிஜு ஜனத…

1 day ago

U19T20 WorldCup: கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு 5 கோடி பரிசு!

ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…

1 day ago

விடுதலை பார்ட் 1 & பார்ட் 2′ டப்பிங் பணிகள் தொடங்கிடுச்சு!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…

1 day ago

This website uses cookies.