டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு : வீடியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு : வீடியோ

ந்த கொரோனா தொற்றுக் குறித்த அச்சத்தைக் கொஞ்சம் போக்கி வந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. நிறைவு நிகழ்ச்சி வானவேடிக்கை, நாட்டியம் வண்ண விளக்குகளால் அலங்காரம், விளையாட்டு வீரர்களின் அணிவகுப்புடன் நிறைவடைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் துவக்க தினத்தன்று வண்ண விளக்கு அலங்காரம், வாணவேடிக்கை. விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் துவங்கியது. அதேபோல இன்றும் டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியம் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலித்தது. வாண வேடிக்கை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு இன்று கலந்துகொண்ட வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது கடைசி போட்டி நடந்த நாளில் இருந்து 48 மணி நேரத்திற்குள் விளையாட்டு வீரர்கள் டோக்கியோ நகரத்தில் இருந்து வெளியேறி விடவேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் அறிவித்திருந்தது.

கொரானா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனால் பல நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு பயணம் ஆகிவிட்டனர். இன்றும் நேற்றும் போட்டிகளில் பங்கு கொண்ட வீரர்கள் மட்டுமே விளையாட்டு வீரர்களின் நிறைவு அணிவகுப்பு பங்கு கொள்ள முடிந்தது.

இந்திய அணிக்கு மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற என்ற பஜ்ரங் புனியா தலைமை தாங்கி சென்றார் அவர் இந்தியக் கொடியை ஏந்திக்கொண்டு இந்திய வீரர்களின் முதல் வரிசையில் அணிவகுப்பில் பங்கு கொண்டார்.

இந்திய வீரர்களின் முகங்கள் எல்லாம் புன்னகையால் மலர்ந்திருந்தன.

2024 ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் பாரிசு நகரத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதனை உறுதி செய்யும் வகையில் பரிசு நகரத்திலிருந்து இசைக் கோலம் ஒன்று நேரடியாக ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் ஸ்டேடியத்துக்கு அனுப்பப்பட்டு அணிவகுப்பின் போது ஒளிபரப்பானது. இன்றைய நிறைவு அணிவகுப்பின் போது உற்சாகமான நாட்டியமும் இடம்பெற்றது

இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 7 பதக்கங்களை பெற்ற இந்திய அணி மகிழ்ச்சியோடு இந்தியா திரும்புகிறது.

error: Content is protected !!