December 3, 2022

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா!- கொஞ்சம் பின்னணி!

‘ஜாவலின் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிற நீரஜ் சோப்ரா இளம் வயதிலேயே ஏகப்பட்ட போட்டிகளில் கலந்து சாதனைப் படைத்திருக்கிறார். அதனால் தனது முதல் ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்வார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே இந்த ஒலிம்பிக்கில் நம்ம இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்து விட்டார் இந்தியா கடைசியாக 2008ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மூலம் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார் ஜஸ்ட் 23 வயதே ஆன இளம் வீரரான நீரஜ் சோப்ரா . இவருக்கு நம் ஆந்தை ரிப்போர்ட்டர் டீம் தொடங்கி, ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியாவே இந்த தருணத்தை நினைத்து பெருமைப் கொள்கிறது.

1997-ம் வருசம் ஹரியானாவில் உள்ள பானிபட் டிஸ்ட்ரிக்கில் இருக்கும் காந்த்ரா கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. சின்ன வயதில் சகல டீன் ஏஜினரைப் போல் கிரிக்கெட்டின் மீதுதான் மிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் தன்னுடைய திறன் ஈட்டி எறிதலில் பிரகாசமாக உள்ளது என்பதை உணர்ந்த அவர், அந்த விளையாட்டில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். இது குறித்து ஒரு பேட்டியின் போது, “நான் ஸ்கூல் டேஸில் கொஞ்சம் குண்டா இருந்தேன். எந்த அளவுக்கு என்றால் என்னோட 12ஆம் வயசிலேயே 90 கிலோ உடல் எடையுடன் இருந்தேன்னா பார்த்துங்கங்க.. இதனால் சக நண்பர்களால் கேலி கிண்டலுக்கு ஆளான நான், என் வெயிட்டை பொருட்டே இந்த ஈட்டி எறிதல் விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.கொஞ்சம் விரிவா சொல்றதுன்னா என் பேமிலி டெய்லி ஜிம் போய் வெயிட் கண்ட்ரோல் பண்ணச் ஒன்னாங்க. ஆனா அதை செய்யாம அதிகாலையில் எல்லை இல்லா தூரம் ஓட தொடங்கினேன். அப்போதுதான் என்னை ஈட்டி எறிதல் வீரர் ஜெய் சௌதரி கவனித்து பேச்சுக் கொடுத்தார். அப்போ அவர் தன்னிடம் ஒருந்த ஈட்டியை கொடுத்து நீரஜ் சோப்ராவை வீச சொன்னார். உடனே நான் வீசிய ஈட்டி 35-40 மீட்டர் தூரம் சென்றது.. அதைப் பார்த்து வியந்து பாராட்டிய சௌதரி என்னை ஈட்டி எறிதலில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார். அத்துடன் உடல் எடை அதிகமாக இருந்தாலும் அவருடைய உடம் நல்ல வலையும் தன்மை கொண்டி இருப்பது கூடுதல் பலம் அப்படீன்னும் சொன்னார். . இப்படி ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்க ஈட்டி எறிதல் விளையாடத் தொடங்கினாலும், இதில் என்னால் இலகுவாக பல விசயங்களை செய்ய முடிகிறது என்று பலரும் என்கரேஜாக சொன்ன நிலையில் என்னை இந்த விளையாட்டில் தொழில்முறை வீரராக மாற்றிக் கொண்டேன்” என்றார். இதன் பின்னர் இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்து முறைப்படிப் பயிற்சி பெற்றார்.

2015-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா, 68.4 மீட்டர் தூரம் எறிந்து, இளையோருக்கான தேசிய சாதனையைப் படைத்தார். 2016-ம் ஆண்டில் போலாந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் பங்கேற்று, 86.48 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரம் அதிகமாக வீசும் அளவுக்கு முன்னேறினார் நீரஜ்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய தடகளப் போட்டியில் 82.23 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்ற அவர், அடுத்த ஆண்டே இந்தியாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தங்கம் வென்று தனது வேட்டையைத் தொடர்ந்தார். அடுத்தடுத்து வெற்றி கண்ட நீரஜ் சோப்ரா, கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக சாமியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறத் தவறினார்.

அச்சூழலில் தான் செய்த தவறுகளை உடனே திருத்திக்கொண்ட அவர், அடுத்து நடைபெற்ற பாட்டியாலா சாம்பியன்ஷிப் போட்டியில் 85.94 மீட்டர் வீசி, மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் க்ளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 86.47 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் இந்திய தடகள விளையாட்டில் புது நட்சத்திரமாக நீரஜ் சோப்ரா முன்னரே திகழ்ந்தார்

காமன்வெல்த் போட்டியை அடுத்து, துபாயின் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தனது ரோல்மாடலாக அவர் எண்ணிய தாமஸ் ரோஹல்லேர், ஜோஹன்னஸ் வெட்டேர், ஹாஃப்மண் போன்ற ஜாம்பவான் வீரர்களுடன் போட்டியிட நேர்ந்தது. தனது சிறு வயதில் இவர்களின் ஈட்டி எறிதல் வீடியோவைக் கண்டே தான் பயிற்சி பெற்றதாக நீரஜ் கூறியுள்ளார். தற்போது இந்திய ராணுவ தரைப் படையில் இளம் அதிகாரியாக இருக்கும் அவருக்கு விரைவில் உத்தியோக உயர்வுக்கான அறிவிப்பு வர இருக்கிறது

தனது ரோல்மாடல்களுடன் போட்டியிட்ட நீரஜ், தனது இரண்டாவது வாய்ப்பில் 87.43 மீட்டர் தூரம் வீசி தேசிய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் இந்தத் தொடரில் 4-வது இடத்தைப் பிடித்தார். 20 வயதே நிரம்பிய நீரஜ் சோப்ராவின் திறமையைக் கண்ட சகவீரர்கள், அவரை வெகுவாக பாராட்டினார். சோப்ராவுக்கு ஒளிமயமான எதிர்காலாம் இருப்பதாகவும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார். அதன் படி கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனை படைத்து வந்த நீரஜ் சோப்ரா, ஒரு பேட்டியின் போது, “ஈட்டி எறிதல் விளையாட்டில் இந்திய அணிக்காக விளையாடுவதுதான், வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம். அதை என் றென்றும் நினைத்து பார்க்கிறேன். அதேசமயம் என்னுடைய ஈட்டி எறியும் ஸ்டைல், ஆரம்பத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவற்றை எல்லாம் மறக்க நினைக்கிறேன். நான் ஈட்டி எறிவது கொஞ்சம் வித்தியாசமாக தெரியும். அதாவது வேகமாக ஓடிவந்து, எல்லைக்கோட்டிற்கு முன்பாகவே ஈட்டியை எறிந்துவிட்டு, குரங்கு போல கீழே தாவி திரும்புவேன். இதுபோன்ற ‘ஸ்டைல்’ நிறைய நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் நம் இந்தியாவில் குறைவாகவே ஊக்குவிக்கிறார்கள். அதனால் ஆரம்ப காலங்களில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. சிலர் இதை கிண்டல் செய்தனர். சிலர் அதை பெரும் சர்ச்சை ஆக்கி பார்த்தனர். ஆனால் சர்வதேச வெற்றிகளை பதிவு செய்ததும், இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி கிடைத்தது” என்று சொன்னார்.

தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது. இந்தியா சார்பில் இதுவரை நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதலில் தங்கம்), பஜ்ரங் புனியா (மல்யுத்தத்தில் வெண்கலம்), மீராபாய் சானு (பளுதூக்குதலில் வெள்ளி) பி.வி.சிந்து (பேட்மிண்டனில் வெண்கலம்), லவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டையில் வெண்கலம்), ஆடவர் ஹாக்கி அணி (வெண்கலம்), ரவிக்குமார் தாஹியா (மல்யுத்தத்தில் வெள்ளி) என 7 பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

நிலவளம் ரெங்கராஜன்