டோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்!

டோக்கியோவில் கொரோனா அதிகரிப்பு: அது சரி.. பதக்கப் பட்டியல் என்ன என்கிறார்கள்!

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் நகரில் ஒரே நாளில் 3,177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் அங்குள்ள மக்களுக்கு, நாளுக்கு நாள் குறைந்து, அச்சம் அதிகரித்து வருவதாக தகவல் பரவிய நிலையிலும் இப்போதையஒலிம்பிக் பதக்கபட்டியலில் போட்டிகள் தொடங்கிய முதல் நாள் சீனா முன்னிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்தது. நேற்று ஜப்பான் பதக்கபட்டியலில் முன்னிலையில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி தங்கம் 13, வெள்ளி ,12 வெண்கலம் 10 என மொத்தம் 35 பதக்கங்களுடன் அமெரிக்க பதக்கபட்டியலில் மீண்டும் முன்னிலை பெற்று உள்ளது குறித்து பலரும் சிலாகிக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்.

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அவசர கால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோ நகரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,848 புதிய கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று 3,177 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக டோக்கியோ பெருநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இதில் வீரர்கள், அதிகாரிகள், நிர்வாகிகளும் அடங்குவர்.

இந்த ஒலிம்பிக் போட்டிகளே அங்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாசிட்டிவ் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் அங்குள்ள மக்களுக்கு நாளுக்கு நாள் குறைந்து, அச்சம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் இன்று காலை நிலவரப்படி தங்கம் 13, வெள்ளி ,12 வெண்கலம் 10 என மொத்தம் 35 பதக்கங்களுடன் அமெரிக்க பதக்கபட்டியலில் மீண்டும் முன்னிலை பெற்று உள்ளது. தங்கம் 13, வெள்ளி 6 ,வெண்கலம் 9 என மொத்தம் 28 பதக்கங்களுடன் சீனா 2 வது இடத்திலும், தங்கம் 13, வெள்ளி 4,வெண்கலம் 5 என மொத்தம் 22 பதக்கங்களுடன் ஜப்பான்3 வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து ரஷியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்தியா 1 வெள்ளிப்பதக்கத்துடன் 45 வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!