மருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு!

மருத்துவ படிப்புகளில் 27% இட ஒதுக்கீடு : மோடி அரசு உத்தரவு!

ருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. சென்னை ஐகோர்ட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு வார காலத்தில் முழுமையான இட ஒதுக்கீடு அமல் செய்யப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டாவின் கீழ் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பட்டய படிப்பு ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டை ஒரு வார காலத்துக்குள் அமல் செய்ய வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆணைப் பிறப்பித்தார் அதன் அடிப்படையில் ஆல் இந்தியா கோட்டாவின் கூடுதல் ஒதுக்கீடு ஆக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடங்களையும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்தது.

1986ஆம் ஆண்டு மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டா என்ற புதிய ஒதுக்கீட்டுப் பிரிவை உச்சநீதிமன்றம் அறிமுகம் செய்தது இதன்படி மருத்துவ பட்டப்படிப்பு 15 சதவீத இடங்களும் மருத்துவ முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத இடங்களும் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. அந்த காலக் கட்டத்தில் இந்த ஆல் இந்தியா கோட்டா இடங்களுக்கு எந்த ஒதுக்கிவிடும் அறிவிக்கப்படவில்லை.
அதே சமயம் 2007ஆம் ஆண்டு மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் ஒதுக்கீடு) சட்டம் எல்லா மத்திய கல்வி நிறுவனங்களிலும் அமல் செய்யப்பட்டது.

இதன்படி எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீத இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீத இடங்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடங்களும் மத்திய கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டன. ஆனால் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடங்கள் ஆல் இந்திய கோட்டா இடங்களில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடங்களும் இந்த ஆல் இந்தியா கோட்டா இடங்களில் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது அகில இந்திய கோட்டா இடங்களுக்கு இட ஒதுக்கீட்டை முழுமையாக அமுல் செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். பிரதமர் உத்தரவுப்படி மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டா இடங்களுக்கு ஒதுக்கீட்டினை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏற்கனவே உள்ள எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு களுடன் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடங்களும் பொருளாதாரரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு, எம்பிபிஎஸ், எம் டி ,எம்எஸ் ,டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் ஆகிய படிப்புகளில் அகில இந்திய கோட்டா இடங்களுக்கு பின்பற்றப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021- 2022 ஆம் ஆண்டு முதல் இந்த ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஒதுக்கீட்டு இடங்கள்

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி எம்பிபிஎஸ் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட இருந்த 1500 மாணவர்களுக்கும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பில் 2500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்- எம்பிபிஎஸ் படிப்பில் 550 பேரும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் 1000 பேரும் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இடங்கள் அதிகரிப்பு

இந்தியாவில் தற்பொழுது 558 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன அரசு மருத்துவக் கல்லூரிகள் – 289, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 269. கடந்த 6 ஆண்டுகளில் புதிதாக 179 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் எம்பிபிஎஸ் இடங்கள் 56% உயர்ந்துள்ளன 2014ல் இருந்த எம்பிபிஎஸ் இடங்கள் 54, 348 .

2020 ஆம் ஆண்டில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்கள் 84,649.

மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீத இடங்கள் உயர்ந்துள்ளன. 2014ஆம் ஆண்டு மருத்துவ முதுநிலை பட்ட வகுப்பில் இருந்த இடங்கள் 30, 191- 2020ஆம் ஆண்டு இந்த முதுநிலை பட்ட படிப்புகளில் இருந்த இடங்கள் எண்ணிக்கை 54, 275 ஆக உயர்ந்துள்ளன.

error: Content is protected !!