பீரியட்ஸ் பெய்ன்ல இருந்து ரீலீஃப் ஆகற வழி இதோ!

பீரியட்ஸ் பெய்ன்ல இருந்து ரீலீஃப் ஆகற வழி இதோ!

Periods pain
Periods cramps
மாதவிடாய் வலி.

நூத்துக்கு தொன்னூறு பெண்கள் மாசாமாசம் அனுபவிக்கிற வலி. 10% பெண்களுக்கு அது எப்பிடி இருக்கும்னே தெரியாது. எங்க மாமா மருமகள் சொன்னது “பீரியட்ஸ் டைம்ல வலிக்குமாமேக்கா எனக்கு அது எப்பிடி இருக்கும்னு கூட தெரியாது.” அவங்கள விட்ருவோம். அதுக்கு ஒரு தனி ஆய்வு இருக்கு . அத இன்னொரு போஸ்ட்டா போடுறேன். இப்ப அந்த வலி அனுபவிக்கிற 90% க்கு வருவோம். அந்த 90% ல நானும் ஒருத்தி.

டொரினோ, பவன்ட்டோ தேடி ஓடின காலம் உண்டு. Hot water bag வச்சு படுத்தே கிடந்த காலம் உண்டு. வலில ஸ்கூல்/காலேஜ்ல வேர்த்து வேர்த்து ஊத்தி வயிறு பிசைஞ்சு வாந்தியெடுத்த நாட்கள் உண்டு. இன்னைக்கி யூடியூப் போய் பார்த்தா அதுக்கான ரெமடீஸ் எக்ஸர்சைஸ் கொட்டிகிடக்கு. அதெல்லாம் எந்த அளவு யூஸாகுதோ எனக்கு தெரியாது. காலேஜ் நாட்கள்ல ஒருமுறை பீரியட்ஸ் வலியில் வயிற பிடிச்சிட்டு தரையில உருண்டு கத்தி அழுதப்ப எங்கம்மா வச்சுகுடுத்த கஷாயம். அடுத்த அரைமணி நேரத்துல பீரியட்ஸ் பெய்னா எனக்கானு கேக்க வச்சது.

இன்னைக்கும் எனக்கும் அபுவுக்கும் பீரியட்ஸ் பெய்ன்க்கு அந்த கஷாயம்தான் டொரினோ பவன்டோ எல்லாம்.

மிளகு – 11
சீனி – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்
அவ்வளவேதான்
மிளக நுனுக்கி சீனியோட சேர்த்து தண்ணில போட்டு நல்லா கொதிக்கவிடனும். 1 டம்ளர் தண்ணி கொதிச்சு 1/2 டம்ளர் ஆனதும் எடுத்து ஆத்தி நம்மளால மேக்ஸிமம் எவ்வளவு சூடு குடிக்க முடியுமோ அவ்ளோ சூட்ல குடிச்சிறனும். ( மிளகு காரத்துக்கு விக்கல் கூட வரும். டேபிள்ஸ்பூன் கணக்கு கரெக்ட்டா பாத்துக்கோங்க. சீனி கம்மியா போட்டீங்கன்னா மிளகு காரம் வாய் வயிறு பொத்துபோயிரும்).

நல்லா தூக்கம் சொக்கிட்டு வரும். பத்து நிமிஷமோ அரைமணி நேரமோ தூங்கி எந்திரிச்சா கன்ஃபார்மா 98% வலி காணாம போயிருக்கும். சில பெண்களுக்கு மூனு நாள் அஞ்சு நாள்கூட வலி இருக்கும். பீரியட்ஸ் முடியிற வரை டெய்லி கூட இந்த கஷாயத்த வச்சு குடிக்கலாம். உடலுக்கு எந்த கெடுதலும் இல்ல.

மாதவிடாய் சமயத்துல பிறப்புருப்பில் அடைச்சுகிட்டது போல ஒரு சங்கடம் இருக்கும் பெண்களுக்கு. இந்த கஷாயம் அதை சரிசெஞ்சிரும். உங்களுக்கோ/உங்கள் மனைவிக்கோ/ உங்க பெண்பிள்ளைகளுக்கோ/ சொந்தபந்தம் பக்கத்து வீட்டு பெண்குழந்தைகளுக்கோ தயங்காம இந்த கஷாயத்த குடுங்க. பீரியட்ஸ் பெய்ன்ல இருந்து அவங்களுக்கு ரீலீஃப் ஆகற வழி காண்பிங்க.

ஹேமா ஜாஸ்மின்  

Related Posts

error: Content is protected !!