கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு!

கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு!

ந்தியாவில் உள்ள கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபிஸ் அசிஸ்டென்ட் பிரிவுகளில் 10,729 காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கு ஐ.பி.பி.எஸ்., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

காலியிடம்:

இந்தியா முழுவதும் 43 கிராம வங்கிகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாடு கிராம வங்கியில் ஆபிஸ் அசிஸ் டென்ட் பிரிவில் 314, அதிகாரி பிரிவில் 156 காலியிடங்கள் உள்ளன.

வயது:

1.6.2021 அடிப்படையில் ஆபிசர் ஸ்கேல் I (சீனியர் மேனேஜர்) பதவிக்கு 21 — 40, ஆபிசர் ஸ்கேல் II (மேனேஜர்) பதவிக்கு 21 – -32, ஆபிசர் ஸ்கேல் III (அசிஸ்டென்ட்) பதவிக்கு 18 — 30, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு 18 — 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி:

ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, அதிகாரி பணியிடங்களுக்கு பைனான்ஸ், மார்க் கெட்டிங், விவசாயம், கால்நடை அறிவியல், ஐ.டி., கம்ப்யூட்டர், சட்டம், பொருளியல், அக்கவுண்டன்சி போன்ற பிரிவுகளில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

பிரிலிமினரி, மெயின் என இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175.

கடைசி நாள்:

28.6.2021

விபரங்களுக்கு:

www.ibps.in/wp-content/uploads/Advt-_CRP-RRB-X_final_1811.pdf

Related Posts

error: Content is protected !!