June 21, 2021

இந்திய மக்கள்தொகையில் 14.2 % பேர் ஒரு டோஸ் + 3.4 % பேர் மட்டுமே 2 டோஸ்!

நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால்,அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில்,தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. அதை எல்லாம் றிந்தும் மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து,கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில அரசுகள் வேறு எந்த நிறுவனத்துடனும், பொதுவெளியிலும் வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்து வாய்ப்பூட்டு போட்டிருக்கும் சூழலில் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3.3 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பு ஊசி மருந்துகளையும் பெற்றுள்ளனராம். 45 சதவீதத்துக்கு மேற்பட்ட 41.1 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45.7 சதவீதம் பேருக்கு மட்டுமே ஒரு டோஸ் தடுப்பு ஊசி யாவது செலுத்தப்பட்டுள்ளதாம். இந்தப் புள்ளிவிவரம் ஜூன் மாதம் 9ம் தேதி புள்ளிவிவரம் ஆகும்.

நம் நாட்டின் மக்கள்தொகையில் 14.2 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். 3.4 சதவீதம் பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பு மருந்துகளையும் பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் ஒப்பிடும் பொழுது இந்தியாவின் முன்னிலை இன்னும் மோசமாக உள்ளது.

முதல் இடத்தில் உள்ள இஸ்ரேல் தன்னுடைய மக்கள் தொகையில் 59.4% பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 41.1 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

பிரிட்டன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது அதன் மக்கள் தொகையில் 39.5 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளனர்.

பிரேசில் அடுத்த இடத்தில் உள்ளது அந்நாட்டில் 10.7 சதவீதம் பேர் தடுப்பூசி மருந்து பெற்றுள்ளனர்.

மெக்சிகோ பிரேசிலுக்கு இணையாக 10.7 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறது.

அடுத்த இடத்தில் இருப்பது ரஷ்யா அங்கு மக்கள் தொகையில் 9% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 3.3 சதவீதம் பேருக்கு தடுப்பு ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது அங்கு 2.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பங்களாதேஷிற்கு கீழே பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகியவை உள்ளன பாகிஸ்தான் தன்னுடைய மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் தென்னாப்பிரிக்கா தன்னுடைய மக்கள் தொகையில் 0.8 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி மருந்து செலுத்தி வருகிறது