Exclusive

தமிழக வளர்ச்சி கொள்கைக் குழு; து.தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்!

மிழ்நாட்டின் வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில், மாநில திட்டக் குழு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் ‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக’ மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர். ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aanthai

Recent Posts

முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்ஸ் – மத்திய அரசு ஒப்புதல்

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்சை செலுத்த மத்திய அரசு ஒப்புதல்…

29 mins ago

பால்டிக் கடலுக்கு அடியில் ரசாயன ஆயுதங்கள்!- பேரழிவுக்கு வழி!

பால்டிக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்களால், இயற்கைக்கு பேரழிவு ஏற்படும் என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

46 mins ago

சபரிமலை பிரசாதம் : பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் = கேரள அரசு அறிவிப்பு!

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட் :வெற்றி பெற்ற 2 இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி!- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் சென்னையில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழா ஜூலை 28 நடைபெற்ற நிலையில், நிறைவு விழா…

2 hours ago

காட்டேரி – விமர்சனம்!

ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் தயாரிப்பில் டீகே இயக்கத்தில் வைபவ், சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காட்டேரி.…

8 hours ago

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ சோதனை!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக டிரம்ப் சொன்னது இதோ:…

24 hours ago

This website uses cookies.