December 6, 2022

ஐயா பூண்டி துளசி வாண்டையார்-க்கு அஞ்சலி!

ந்தாரை வாழ்வைக்கும் நம்ம தமிழகத்தின் நெற்களஞ்சியம் -அப்படீன்னு அழைக்கப்படும் தஞ்சை பகுதியில் விவசாயம் என்று சொன்னாலே… முக்கியமா ஒரு சில குடும்பங்ளை வரிசைப்படுத்துவாங்க…. அதுலே துளசி அய்யா வாண்டையார் குடும்பம் ரொம்ப முதன்மையானது. தஞ்சாவூர் பக்கத்துலே இருக்கும் பூண்டி கிராமம் இவருடைய குடும்பத்துக்குச் சொந்தமுன்னு சொன்னா மிகையில்லை.

மொத்தமா நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கட்டி ஆண்ட பாரம்பரியம்.. இன்றைக்கும் பதினோரு கிராமங்களில் கிடக்கும் அறுநூறுக்கும் அதிகமான ஏக்கர் நிலத்தில் இவர் சொன்னால்தான் நடவு, அறுப்பு என நடக்கிறது விவசாயம். சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம்…. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் என்று டெல்டா பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கானோரை பட்டதாரிகளாக உருவெடுக்கச் செய்த பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியை நிர்வகிக்கும் குடும்பம்… என அத்தனை புகழாரங்கள் இருந்தாலும், ”நான் ஒரு விவசாயிப்பா..” என்பதில்தான் பெருமை அடைகிறார் வாண்டையார்.

இது குறிச்சு ஒரு பேட்டியின் போது ‘ “ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு முறை பயணம் போயிருந்தேன். பல துறைகள்ளே பிரபலமான ஆட்கள் ஒன்றாக் கூடி, தங்களை அறிமுகப்படுத்திய எடத்துலே, நான் என்னை ஒரு விவசாயினு சொன்னேன். அதைக் கேட்டு அங்கிருந்த அம்புட்டு பேருமே ஆச்சர்யமா பார்த்தாங்க. விவசாயம் மூலமா ஒரு ஆள் முன்னேறினான்னு அவங்களால நம்பவே முடியலை. உலகமே விவசாயிகளை இன்னிவரைக்கும் அப்படித்தான் பார்க்குது. விவசாயினு சொல்லிக்க பலரும் வெட்கப்படுற நிலை உருவாகிடுச்சி. வயித்துக்குச் சோறு போடுற வாழ்க்கையை விட உயர்ந்த வாழ்க்கை வேறென்னப்பு இருக்க முடியும்” என்றாராம்.

அலங்காரத்துக்காக வளர்க்கப்படும் செடி, கொடிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, பிரமாண் டமாக மூலிகைப் பண்ணையை தன்னுடைய கல்லூரி வாயிலில் அமைத்திருக்கிறார் வாண்டையார். தன்னைக் காண வருவோரிடம் அதை சுட்டிக்காட்டி “கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் மாதிரியான கறிகள் இந்த மண்ணுல விளையாது-ன்னு பலரும் சொல்வாங்க. அதெல்லாம் மண்ணோட மகிமை புரியாத பேச்சு. அதுக்காகவே அதையெல்லாம் இங்கே பயிர் பண்ணி இருக்கேன். பாருங்க எப்படி விளைஞ்சிருக்கு. இதுக்காக எந்த விதமான செயற்கை உரங்களையும் பயன்படுத்துறது கிடையாது. இப்போ இந்த மண்ணோட சக்தி எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சி. விஷமில்லாத காய்கறிகளை காலேஜ் விடுதி மாணவர்களுக்கு கொடுக்கணும் கிறதுதான் என்னோட ஆசை” என்று ஆசையோடு சொல்வார்.

தன் வாழ்க்கை குறித்து ”அப்பா காலத்துல தினமும் ரெண்டு மணி நேரம் டிராக்டர் ஓட்டி உழுவேன். பெரியப்பா நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை நேரடியா கவனிச்சு விவசாயம் பண்ணினவர். ‘நாம நிலத்தைப் பார்த்தாத்தான் நிலம் நம்மளைப் பார்க்கும்’னு அவர் சொன்ன பாடம் அப்படியே அசரீரி மாதிரி உள் மனசுல கேட்டுக்கிட்டு இருக்கு. அதனால தான் எல்லா நிலங்களையும் எம் பார்வையிலேயே வச்சிப்பேன். வர வர விவசாயச் செலவுகளும் கூலியும் உயர்ந்த அளவுக்கு சரியான விகிதத்தில நெல் விலை உயராததுதான் விவசாயத்தை முடங்க வெச்சிடுச்சி. வாழ்வாதாரமா இருக்கிற நெல்லுக்கு ஒழுங்கான விலை நிர்ணயத்தை நம்ம அரசு ஏற்படுத்த தவறிடுச்சு. அதைக் கேட்க விவசாய ஜீவன்களோட குரலுக்குச் சக்தி இல்லாமல் போயிடுச்சு. இயற்கை உரத்துக்காகக் கூட நாம ஏங்க வேண்டிய நிலையாகிடுச்சு. ‘பண்ணிய புண்ணியம் பயிரிலே தெரியும்’ணு சொல்வாங்க. இயற்கைக்கு எதிரான எதுவுமே பாவம்தான். இயற்கையின் சக்தி புரியாம அதுகிட்ட மனுஷன் மோதுறான். கடைசியில, தன்னோடு மோதுறவங்கள இயற்கை சிதறடிச்சிடும். இது தெரிஞ்சி மனமுருக இயற்கையை வணங்கக் கத்துக்கணும்” அப்ப்டீன்னு சொன்னாராக்கும்

இதுய் மட்டுமின்றி பல ஆண்டுகளாய் ஒருங்கிணைந்த தஞ்சைமாவட்டத்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் போல் பல்லாயிரக்கானக்கில் இளநிலை முதுநிலை ஆராயச்சியாளர்கள் என எண்ணிலாடங்கானவர்களை உருவாக்கிய பூண்டி கல்லூரியின் நிறுவனர் இவர்.

படிக்க முடியாத ஏழைமாணவர்களுக்கு மூன்றான்டுகளுக்கும் இலவச விடுதி.உணவு என அனைத்தும் வழங்கப்பட்டு பட்டதாரிகளை உருவாக்கிய கற்பக விருட்சம். இன்று தமிழ்நாட்டின் பல்வேறுதளங்களில் அரசியல், கலைத்துறை, ஆட்சிப்பொறுப்பு, என அங்கு படித்தவர்கள் நிரம்பி உள்ளார்கள். எந்த வித நன் கொடையும் இல்லாமல் கல்வி அளித்து வந்தவர்..

சாதி, மதம் பாராமல் எளிய குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கிய கல்லூரியையும் கல்வி வள்ளல் துளசி ஐயா வாண்டையாரை எப்போதும் நினைவில் கொள்வோம்

கண்ணீருடன் ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்