தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வெற்றி கொண்டாடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வெற்றி கொண்டாடங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தப் பிறகு, வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வெற்றி கொண்டாட்டங்கள் எதையும் நடத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந் நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா விதிகளை முறையாகப் பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு நேற்று சஞ்சீப் பானர்ஜி அமர்வு நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கண்டம் தெரிவித்தது. மேலும் நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்கள் காதில் வாங்கவில்லை எனவும் சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்குக் காரணம் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் , தமிழகம் முழுவதும் வாக்கும் என்னும் மையங்களில் சானிடைசர்கள் தெழித்து முறையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் இதுகுறித்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் தேர்தல் எண்ணிக்கைக்கு பின் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஓட்டு எண்ணி முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது பட்டாசு வெடிப்பதோ, கூட்டமாக கூடி கொண்டாடுவதோ கூடாது. தேவை இல்லாமல் யாரும் கூடக்கூடாது. வெற்றி பெறும் நபர்கள் சான்று பெற வரும் போது கூட்டமாக வரக்கூடாது. இருவர் மட்டுமே வரலாம். வெற்றி பெறும் நபர்கள் மக்களை சந்திப்பது கூடாது. தேர்தல் வெற்றி தொடர்பான கூட்டங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!