May 10, 2021

உடல்களை திறந்த வெளியில் எரியூட்டும் குஜராத் மாடல்!

சந்தி சிரிக்கும் குஜராத் மாடல்.!.

ஆமாம்…

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது பேரலை காரணமாகத் திகைத்துப் போய், நாடு நிற்கும் போது, மரணமடைந்த கொரோனா நோயாளிகளின் உடல்களைத் தகனம் செய்ய, சுடுகாடுகளில் இடம் இல்லாத காரணத்தால், குஜராத்தில் திறந்த வெளிகளில் எரியூட்டும் அவலம்; குஜராத் மாநிலம், அகமதாபாத், வதோதரா, ராஜ்கட் உட்பட பல இடங்களில், பிணங்களைத் திறந்த வெளியில் தகனம் செய்வது கண்டனத்திற்குரியது…!

அதைப் போலவே, சத்தீஸ்கர் மாநிலத்தில், இறந்து போனவர்கள் உடல்களைப் பாதுகாத்து வைக்கப் பிணவறைகளில் இடமில்லாத காரணத்தால், அங்கங்கே, திண்ணைகளிலும், திறந்த வெளிகளிலும், உடல்களைக் குவித்துப் போடும் பரிதாபம்…!

சத்தீஸ்கர் மாநிலத்தின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையான ராய்ப்பூர் மருத்துவமனை அதிகாரிகள், “ஒரே நேரத்தில் இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்ததால் தான் இப்படி ஒரு நிலை வந்தது என்றும், உயிருடன் இருப்பவர்களை கவனிக்கும்போது, இறந்து போனவர்களை கவனிக்க இயலவில்லை” என்றும் கூறினர்…

கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா/டெல்லி போன்ற மாநிலங்களில் கூட, இதே நிலைமை வரக்கூடும் என்றும் தெரிகிறது….

கண்ணியமாக உயிருடன் வாழும் உரிமையைப் போலவே, இறந்து போன உடல்களுக்கும் சில உரிமைகள் உண்டு என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டால் நல்லது தான்….

Shahul Hameed