April 12, 2021

டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை!

செம்பளி எலெக்சனையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைமுறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதேபோல், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி (நாளை) தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று (4–ந்தேதி) முதல் 6-ந்தேதி வரை 3 நாட்களுக்கு ‘டாஸ்மாக்’ கடைகளை அடைக்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்நிலையில் நேற்று இரவு தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் குவிந்தனர்.

ஒவ்வொரு மதுக்கடைகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. துரைப்பாக்கம், கிண்டி, குன்றத்தூர், மாதவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்பட பல இடங்களில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தற்போது தேர்தல் நடைபெறுவதால் யாருக்கும் 5 பாட்டில்களுக்கு மேல் விற்ககூடாது என்று தேர்தல் கமி‌ஷன் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனால் 4 பாட்டில்கள் வரை மதுவை கேட்டு வாங்கிச் சென்றார்கள். ஆனாலும் நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக ‘டாஸ்மாக்’ அதிகாரி தெரிவித்தார்.
வழக்கமாக ஒவ்வொரு நாளும் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை மதுபாட்டில்கள் விற்பனையாவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது..