ஐநா -வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்! இந்தியா புறக்கணிப்பு!

ஐநா -வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்! இந்தியா புறக்கணிப்பு!

தக்கனூண்டு இடப்பிறப்பை தாயகமாக வைத்துக் கொண்டு சர்வதேச அளவில் லாபி செய்யும் ஸ்ரீலங்கா-வுக்குக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட ஒரு வழியாக தீர்மானம் நிறைவேறியது.இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் குறித்த விசாரணை இதன் மூலம் உறுதியானது என்பதும் இலங்கையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற தமிழக கட்சிகளும் இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் விடுத்த கோரிக்கையை இந்திய அரசு ஏற்காமல், வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்திய அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில் 10 ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதை தொடர்ந்து வலியுறுத்து வந்தனர். மேலும் இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டங்களில் தீர்மானங்கள் கொண்டுவருவதும் அதில் இலங்கை தொடர்ந்து வெற்றி பெறுவதும் வாடிக்கையான ஒன்று.

இந் நிலையில் தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பிரிட்டன் உட்பட 6 நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தன. அதாவது மனித உரிமை மீறல்களை இலங்கை விசாரித்துதான் ஆக வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானத்தின் சாராம்சம். இதன் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 21 நாடுகள் ஓட்டளித்தன. இலங்கையில் அப்படி ஒரு விசாரணையே தேவை இல்லை என சீனா, பாகிஸ்தான் உட்பட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லையாக்கும். இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014 ஆகிய நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்று முறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014ம் ஆண்டு வாக்களிக்கவில்லை. தற்போது நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறவில்லையாக்கும்.

error: Content is protected !!