தமிழகத்தில் 7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் உள்ளிட்ட சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் பொது பெயரிடக்கோரி பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டன. இந்த கோரிக்கையை பரிசீலிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4-ஆம் தேதி ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராக கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின்பரிந்துரையின் படி தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயரிட மாநில அரசின் பரிந்துரை மீது மத்திய அரசின் ஆணை பெற தமிழக அரசு அனுப்பியது. இதனை தொடர்ந்து பட்டியலினத்தைச் சேர்ந்த 7 உட்பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகை செய்யும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார். மேலும் தனது பெயர் ‘நரேந்திர’ போன்றே ‘தேவேந்திர’ என்ற பெயரும் ஒரே ராகத்தில் இருப்பதாகவும் அவர் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டு பேசியிருந்தார். தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த மசோதா அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் குடும்பம், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படவேண்டும் என்ற மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெற்றதையடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது. பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும் எனவும், மற்றபடி பட்டியலின சலுகைகள் தொடரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.…
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக…
ஹின்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக அதானி குழுமம் பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். ஹின்டன்பர்க் தங்களது அறிக்கை தயாரிக்க இரண்டு வருடங்கள்…
ஒடிசாவில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். பிஜு ஜனத…
ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை முதல் எடிஷனில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து முதல் சாம்பியன்ஷிப்…
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் 'விடுதலை பார்ட் 1…
This website uses cookies.