234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 4718 பேர் மனுத்தாக்கல்!

234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 4718 பேர் மனுத்தாக்கல்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 4718 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் 684 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதுபோல, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கலும் முடிவடைந்து உள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்புமனுவைத் திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்புமனுக் குறித்து இறுதிப்பட்டியல் வெளியாகும்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4,718 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் (மாலை 4 மணி நிலவரம்) நேற்று மாலை வரை 4034 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 684 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் இன்று ஒரே நாளில் 684 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை தொடங்குகிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

error: Content is protected !!