August 2, 2021

புது பார்லிமெண்ட் கட்ட அடிக்கல் நாட்டு விழா மட்டும் நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

971 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டுவதற்கு பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்தநிலையில், புதிய நாடாளுமன்றம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அப்பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ளும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து விட்டு நாடாளுமன்ற பகுதியில் அமைப்பை முழுக்க மாற்றி புதிதாக நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு அடிக்கல் நாட்டலாம், ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் கொஞ்சம்கூட மாற்ற கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளது.

புது டெல்லியில் ஏற்கனவே நாடாளுமன்றம் உள்ள பகுதியில் எந்த மாறுதலும் செய்யக் கூடாது புதிய நாடாளுமன்றம் கட்டக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த நவம்பர் 5ஆம் தேதி ஒத்தி வைத்தது. அப்படி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிப்பு வெளியான காரணத்தினால் சுப்ரீம் கோர்ட் தானாக விசாரணை ஒன்றை திங்கட்கிழமையன்று துவக்கியது. அந்த விசாரணையில் மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கலந்து கொண்டார்.

வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மனுதாரர் கூறியுள்ள தற்கு நேர் எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கையின் பேரில் கட்டுப்படுத்தும் உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கவில்லை. அப்படி சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கண்ணியமாக, பொறுப்புடன் நடத்தும் பொழுது அதனை மத்திய அரசு எதிரொலிக்க வேண்டும். அதனால் தீர்ப்பு வெளியாகும் வரை அந்தச் சூழலை மாற்றக்கூடிய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்று உறுதி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கான்வில்கர் தலைமை யிலான அமர்வு மத்திய அரசு தலைமை வழக்கறிஞரை கேட்டுக்கொண்டது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து ஆணை பெற்ற பிறகு சூழலில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாக்குறுதி வழங்கினார். இதன் பின்னர், புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.