January 29, 2022

தெருநாய்களுக்கு உணவுக் கொடுத்து பழகுங்க!

ம் நாட்டில் வீடற்ற செல்லப் பிராணிகளின் நிலை பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்ற நிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. அது தவிர 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது என்று சர்வதேச அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் 7.5 கோடி

இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் என்றால், சீனாவில் 7.5 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.8 கோடி, ரஷ்யாவில் 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெருநாய்கள் குறித்து பேசும் உயிரின ஆர்வளர்கள் கூறும்போது, நாம் போடும் மிச்சம் மீதி, நம் குழந்தைகள் கழிக்கும் மலம் என்று அனைத்தையும் தின்று வீதியையும் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு, பைசா செலவில்லாமல் வேலை செய்யும் கூலியாட்கள்தான் தெருநாய்கள். இப்போது நாகரிகம் என்கிற பெயரில் வளர்ப்பு நாய்கள் வந்துவிட்டதால், தெருநாய்களின் தேவை குறைந்துவிட்டது.

தெருநாய்கள் இல்லாமல் போனால், உயிர்ச்சங்கிலி எனும் உன்னதமான ஒன்று அறுபட்டு அதன் எதிர்விளைவாக, அந்தந்த பகுதிகளில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமே ஏதாவது ஒரு பாதிப்பு வரவே செய்யும். அது என்ன என்பதை காலம்தான் தீர்மானிக்கும். எனவே, தெருநாய்களான நம் நாட்டு நாய்களைக் காப்பாற்றும் வகையில், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களும் தெரு நாய்களை மதித்து அவற்றுக்கும் மிச்சம் மீதி உள்ள உணவைப் போட்டு வளர்க்க ஆரம்பித்தால், அவை கடைசி வரை நன்றி உணர்வோடு நிச்சயமாக வாலாட்டிக் கொண்டு நம்மோடு வளையவரும் என்பதை உணரவேண்டும். ஏனெனில், மனிதன் முதன்முதலாக வளர்க்க ஆரம்பித்ததே நாய்களைத்தான் என்கின்றனர் உயிரின ஆர்வலர்கள்.