April 17, 2021

15 அமைச்சர்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள்!- பீகார் சோகம்!

பீகாரில் அண்மையில் நிதீஷ்குமார் தலைமையில் பொறுப்பேற்ற அமைச்சரவையில் மொத்தம் 15 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த பதினைந்து பேரில் 8 அமைச்சர்கள் மீது கடுமை யான கிரிமினல் வழக்குகள் விசாரணையில் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் பீகாரில் முதல்வர் உட்பட மொத்தம் 15 உறுப்பினர்கள் ஆளுநர் பாகு சவுகான் முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றனர். இவர்களில், தலா நான்கு பேர் உயர் சாதிகள் மற்றும் பின்தங்கிய சாதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மூன்று பேர் மிகவும் பின் தங்கிய சாதிகள் மற்றும் பட்டியலின சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் இந்த புதிய அமைச்சர்கள் குறித்து ஜனநாயக சீர் திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள செய்தி யில், பதவியேற்ற 15 அமைச்சர்களின் ராம்சுரத்குமார் என்கிற அமைச்சர் பற்றிய தேர்தல் பிரமாண ஆவணம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் காணப்படவில்லை. மீதமுள்ள 14 அமைச்சர்களின் பற்றிய விவரங்கள் தான் கிடைக்கின்றன.

அதில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த எட்டுப் பேர் மீது உள்ள வழக்குகளில் 6 பேர் மீதான வழக்குகள் கடுமையான கிரிமினல் குற்றங்களுக்கு வழக்குகள் ஆகும். பதவியேற்ற 14 அமைச்சர்களும் தங்களுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர். சிலர் அதை விட கூடுதலாக இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார்கள்.

சராசரியாக கணக்கிடும் பொழுது பதவியேற்ற அமைச்சர்களின் கூறுவதற்கு 3.93 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பதவியேற்ற அமைச்சர்களில் 4 அமைச்சர்கள் தாங்கள் 8வது வகுப்பு முதல் 12வது வகுப்பு வரை படித்து இருப்பதாக ஆவணத்தில் தெரிவித்துள்ளனர் மற்ற 10 பேரும் பட்டதாரிகள் அல்லது மேல்நிலைப் பட்டதாரிகள் என பதிவு செய்துள்ளனர். 14 அமைச்சர்களின் எட்டுப் பேர் 51 வயது தாண்டியவர் கள் அவர்களில் சிலருக்கு 25 வயது கூட ஆகிறது. மீதமுள்ள 6 பேர் 41 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது