மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் + அலவன்ஸ்களை உயர்த்த மோடி அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் + அலவன்ஸ்களை உயர்த்த மோடி அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் உயர்த்துவது பற்றி 7வது ஊதியக்குழு பரிந்துரைத்திருந்தது. இதன்படி அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை ஏற்கனவே ஏற்கப்பட்டு அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட 197 அலவன்ஸ்கள் பற்றி ஊதியக்குழு ஆய்வு செய்தது்.  அவற்றில் 56 அலவன்ஸ்களை ரத்து செய்யவும், 37அலவன்ஸ்களை வேறு வகை அலவன்ஸ்களுடன் இணைக்கவும் பரிந்துரை செய்தது.  மற்ற அலவன்ஸ்களில் மாற்றம் செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இவற்றின்மீது அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அவர்களின்  அறிக்கையும் மத்தியஅரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இவற்றின் மீது பிரதமர்மோடி வெளி நாடு சென்று திரும்பியதும் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து நேற்று திரும்பியதும் மாலையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில்நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 

இது பற்றி செய்தியாளர்களிடம் மத்திய நிதி  அமைச்சர் அருண் ஜெட்லி  கூறியதாவது:

* 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த அலவன்ஸ்களுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த அலவன்ஸ்கள் உயர்வு வருகிற 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். மொத்தம் 108 அலவன்ஸ்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி 56 அலவன்ஸ்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊழியர்களின் நலன் கருதி மற்ற அலவன்ஸ்களை 34 திருத்தங்களுடன்  7வது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி  ஏற்றுக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த அலவன்ஸ்கள் உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,748.23 கோடி கூடுதல் செலவு பிடிக்கும். இந்த ஆண்டு ஜூலையில் தான் அமல்படுத்தப்படுவதால் அதற்கான செலவினம் குறையும்.

அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை அகவிலைப்படி  தாண்டும் போது வீட்டு வாடகைப்படியை எக்ஸ்,ஒய்., இசட் நகரங்களுக்கு  10,20,30 சதவீதம் என அதிகரிக்கலாம் என்று ஊதியக்குழு பரிந்துரைசெய்தது. ஆனால்  அகவிலைப்படி 25 சதவீதத்தை  தாண்டினாலே வீட்டு வாடகைப் படியை உயர்த்தலாம் என்றுநாங்கள் முடிவு செய்துள்ளோம்.அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம்   அகவிலைப்படி என்ற அளவை  தாண்டும் போது அதற்கேற்ப வீட்டுவாடகைப் படியும் 10,20,30 ஆக  உயரும். 25 சதவீதத்துக்கும் கீழாக அகவிலைப்படி இருக்கும் போது வீட்டு வாடகைப்படி 8,16,24 சதவீதமாக இருக்கும்.  குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18ஆயிரத்துக்கு, அடிப்படை  வீட்டுவாடகைப் படி ரூ.1800,3600,5400 க்கு குறையாமல் இருக்கும்.

* ஓய்வூதியர்களுக்கான மருத்துவ அலவன்ஸ் ரூ.500ல்இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. ஓய்வூதியர்களின் நலன்களை கருத்தில் கொண்டே மருத்துவப் படியை இரு மடங்காக உயர்த்திஇருக்கிறோம்.  பணியில் உள்ள ஊழியர்கள் 100சதவீதம் செயல்பட முடியாத பட்சத்தில் வழங்கப்படும் மாதாந்திர அலவன்ஸ் ரூ.4500ல் இருந்து ரூ.6750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* மருத்துவத்துறையில் மாதாந்திர நர்சிங் அலவன்ஸ் ரூ.4800ல் இருந்து ரூ.7200ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆபரேஷன்தியேட்டர் அலவன்ஸ் ரூ.360ல் இருந்து ரூ.540 ஆக அதிகரிக்கப்படும். நோயாளி கவனிப்பு அலவன்ஸ் என்ற பெயரில் மாதம் ரூ.2070 முதல் 2100 வரை வழங்கப்பட்டது. இனிமேல் ரூ.4100முதல் 5300வரை வழங்கப்படும்.

* சியாசின் பனிசூழ்ந்த மலைப்பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கான மாதாந்திர சியாசின் அலவன்ஸ் ரூ.14ஆயிரத்தில் இருந்து ரூ.30ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதிகாரிகளுக்கான சியாசின் அலவன்ஸ் ரூ.21 ஆயிரத்தில் இருந்து 42,500 ஆக அதிகரிக்கிறது.

* இந்த அலவன்ஸ்கள் உயர்வினால் 34 லட்சம் மத்தியஅரசு ஊழியர்களும், 14 லட்சம் ராணுவத்தினரும் பயன்அடைவார்கள். ஓய்வூதியதாரர்கள் 50லட்சம் பேரும் அலவன்ஸ் உயர்வினால் பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு நிதி அமைச்சர் ஜெட்லி கூறினார்.

Related Posts

error: Content is protected !!