April 12, 2021

ட்ரம்ப் அடம் பிடிப்பது கஷ்டமா இருக்குது – ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக சொல்லி தோல்வியை ஏற்க டொனால்ட் டிரம்ப் மறுத்து கொண்டு வருகிறார். இதைத்தொடர்ந்து தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்துள்ளது. இந்த நேரத்தில் ,வெல்லிங்டன் மாகாணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் .

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்காவின் 46 ஆவதி அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத அதிபர் ட்ரம்பும் அவரின் ஆதரவாளர்களும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு ஏற்றார்போல் ஜோபைடன் வெற்றிபெற்ற முக்கிய மாகாணங்களில் இரண்டு தரப்பினருக்கும் இடையே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் அதிபர் ட்ரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை விட வெறும் 14,000 வாக்குகள் மட்டுமே பின் தங்கியுள்ளதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அம்மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. குடியரசுக் கடசியின் கோரிக்கையை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜார்ஜியா மாகாண செயலாளர் தெரிவித்துள்ளார். பெரும்பாண்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போது 290 இடங்களை ஜோ பைடன் வெற்றிபெற்று விட்டதால் ஜார்ஜியா மாகாண மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பைடனுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

இதை அடுத்து அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியுற்றதை டிரம்ப் ஏற்க மறுப்பது தனக்கு தர்மசங்கடமாக உள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்