December 4, 2021

கொரோனா செகண்ட் இன்னிங்க்ஸ் – இந்திய டாக்டர்கள் புதுத் தகவல்!

நம் நாட்டில் மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அரசுகள் மேற்கொண்டு வரும் துரித பரிசோதனை காரணமாக பாதிப்புகள் விரைவில் கண்டறியப்படுவதோடு கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரூ, மும்பை ஆகிய நகரங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஓன்றில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி 27 வயது பெண் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜீலை 24 ஆம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பிய அந்த பெண்ணுக்கு சுமார் ஒருமாதங்களுக்குப் பிறகு அதே பெண்ணுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மும்பையின் சியோன் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளார். இந்த இரண்டாம்முறை பாதிப்பு என்பது அரிதானவையே தவிர, தீவிரமானது அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், பொதுவாக, நோய்த்தொற்று ஏற்பட்டால், கொரோனா இம்யூனோகுளோபூலின் ஜி (IgG) ஆன்டிபாடி, இரண்டு முதல் மூன்று வாரங்கள் தொற்றுக்குப் பிறகு நேர்மறையாக சோதிக்கப்படுகிறது. “இருப்பினும் இந்த நோயாளிக்கு, ஆன்டிபாடி சோதனை எதிர்மறையாக திரும்பியுள்ளது. இரண்டு வெவ்வேறு ஆய்வகங் களிலிருந்து அதை உறுதிப்படுத்தினோம். இதன் பொருள் தொற்றுநோய்க்குப் பிறகு அவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. மேலும் சிகிச்சையில் செலுத்தப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளும் குணமடைந்த சில நாட்களில் மறைந்துவிடும் இதனால் அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளன