September 28, 2022

ஆறு அடி இடைவெளியை அடையாளங்காட்டும் தொப்பி: பள்ளி மாணவி கண்டுபிடிப்பு

கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் உல­கையே அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்கும் இச்சூழலில் , இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த 15 வய­து பள்ளி மாணவி நேகா ஷுக்லா, அறி­வியல் தொழில்­நுட்ப யுக்­தியில் புதிய தொப்பி ஒன்றை கண்­டு­பி­டித்­தி­ருக்­கிறார். தலையில் அணிந்­தி­ருக்­கும் அந்த தொப்பி 6 அடி இடை­வெளியை அடை­யா­ளங்­காட்டும் விதத்தில் ஓர் அதிர்வை ஏற்­ப­டுத்தும். ‘பீப்… பீப்…. பீப்’ என்று ஒலி எழுப்­பும்.

கொரோனா எதி­ரொ­லி­யாக ஊர­­டங்கு – லாக்­டவுன் அமுல்­ப­டுத்­­தப்­பட்டு வரு­கி­றது. பொது­ இடங்­களில் ஒரு­வ­ருக்கும் இன்­னொ­ரு­வ­ருக்கும் இடையில் குறைந்­தது 6 அடி இடை­வெளி இருக்க வேண்டும் என்று அர­சுகள் எச்­ச­ரித்து வரும் நேரத்தில் சமூ­கத்­துக்கு பல­ன் தரும் விதத்தில் பய­னுள்ள இந்தத் தொப்­பியை வடி­வ­மைத்­தி­ருக்­கிறாள்.

இந்தத் தொப்­பியின் உள்ளே அல்ட்­ரா­சோனிக் சென்சார், மைக்­ரோப்­ராசசர், பஸ்சர், 9 வோல்ட் பேட்­டரி ஆகி­யவை உள்­ளன. பொது­ இடங்­களில் நடந்து போகி­ற­போதோ அல்­லது கூடி­யி­ருக்­கி­ற­போதோ நமக்கு முன்னே இருப்­ப­வர்­க­ளுக்கும் நமக்கும் இடையில் 6 அடி தூரம் இருப்­பதைக் காட்­ட இந்தத் தொப்பி லேசான அதிர்வை உண்­டு­பண்ணும். பீப்… பீப்… பீப்… என்னும் ஒலி­யை எழுப்­பும்.

பொறி­யியல் மற்றும் தொழில்­நுட்­பத்தில் தனி ஆர்­வமும் அக்­க­றையும் கொண்­டி­ருக்கும் நேகா, இந்த சாத­னத்தை கண்­டு­பி­டிக்கும் முயற்­சியில் ஏப்ரல் மாதம் இறங்­கினார். கடின உழைப்பின் முடிவில் இந்த தொப்­பி­யை வெற்­றி­க­ர­மாக வடி­வ­மைத்து, சாதனை படைத்­தி­ருக்­கி­றாள்.

அமெ­ரிக்­காவில் இளம் விஞ்­ஞா­னிகள், திற­மை­சா­லிகள் அறி­முகம் என்னும் நிகழ்ச்­சியில் நேகா அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டாள். அவ­ளது கண்­டு­பி­டிப்பும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அவள் தன் கண்­டு­பி­டிப்பு குறித்து செய­ல்வி­ளத்­தை­யும் நடத்திக் காட்­டினாள். அது பார்­வை­யா­ளர்­களின் பாராட்­டையும், வர­வேற்­பையும் பெற்­ற­து.

முக­மூடி அணி­யாமல் பொது­யிடங்­க­ளுக்கு செல்­வது, சமூக விலகல் இல்­லாமல் நெருக்­க­மாக இருத்தல் கார­ண­மாக உயிர்க்­கொல்லி கொரோனா வைரஸ் எளிதில் தொற்றி உல­க­ளவில் பல லட்சம் பேரின் உயிரைக் குடித்­தி­ருப்­பது நினை­வி­ருக்­கலாம். இத்த­கைய சூழ்­நி­லையில் சமூக வில­கலின் அவ­சி­யத்தை உணர்ந்தே நேகா இந்தத் தொப்­பியைக் கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றாள்.

பெனின்­சுலா நாட்டில் மெக்­கா­னிக்ன் பர்க் நகரில் உள்ள கம்­பர்லாண்ட் வேலி ஹை ஸ்கூல் மாணவி நேகா. இவர் இளம் விஞ்­ஞானி எழுத்­தாளர், பேச்­சாளர் என்று மூன்று முகம் கொண்­டி­ருக்­கிறாள். பல்­வேறு அறி­வியல் போட்­டி­களில் பங்­கேற்று பல பரி­சு­களை, விரு­து­களை வென்­றி­ருக்­கிறாள். அறி­வியல், தொழில்­நுட்பம், பொறி­யியல் மற்றும் கணக்கு பாடங்­களில் தனி ஆர்வம் காட்டி வரு­பவள். அடுத்­த­வர்­க­ளுக்கு இந்த சமூ­கத்­துக்கு பய­னுள்ள விதத்தில் எதை­யா­வது கண்­டு­பி­டிக்க வேண்­டு­மென்று உந்­து­தலின் வெவெப்­பாடே இந்த ‘சிக்ஸ் ஃபீட் அபார்ட்’ அலாரம் கேப் – அதா­வது 6 அடி விலகல் உஷார் படுத்தும் தொப்­பி என்று சிரித்துக் கொண்டே சொல்­கி­றாள்.

அறி­வியல் மட்­டு­மல்ல இசை­யிலும் எனக்கு பேரார்வம் என்று சொல்லும் நேகா, பல ஆண்­டு­க­ளாக பியா­னோவும், கிதாரும் வாசித்து வரு­கிறாள். என் அறி­வியல் திற­மையைப் பயன்­ப­டுத்தி எதிர்­கா­லத்தில் சிறந்த தொழில்முனை­வ­ரா­கவே ஆசை என்­கி­றாள்.