இன்னும் 2 ஆண்டுகள் இந்த கொரோனா ஆட்சிதான்- உலக சுகாதார மையம்!

கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பின்பற்றுவதில் பல்வேறு நாடுகளில் சிக்கல் உள்ளது. இதனால் பரவல் அதிகரிக்கிறது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் கொரோனாவை கையாள முடியும். இப்போது வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதனை முடிவுக்கு கொண்டு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

ஒருவேளை கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், 1918-ம் ஆண்டு உலகையே உலுக்கிய ஸ்பேனிஷ் ப்ளூ வைரஸ் முடிவடைந்த நேரத்துக்கு முன்னரே கரோனாவை கட்டுப்படுத்தி விடலாம். ஸ்பானிஷ் ப்ளூ தொற்றால் பல கோடி பேர் உயிரிழந்தனர். 2 ஆண்டுகள் கழித்து தான் பாதிப்பு குறைந்தது. இப்போதும் அப்படிதான். 2 ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் சீக்கிரமாக கட்டுப்படுத்திவிடலாம்.”என்று தெரிவித்துள்ளார்