ஆன்லைன் கிளாஸ் – எந்த சப்ஜெக்ட் கடினம்? – சர்வே ரிசல்ட்!

மத்திய அரசின் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் ஆன் லைனில் படிக்கும் மாணவர்களில் 27சதவீத மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் கிடைக்கவில்லை என்றும் ம் ஒரு பாடமாக கணிதத்தை ஆன்லைன் ஊடகம் வழியாகக் கற்றுக்கொள்வது கடினம் எனவும் என்சிஇஆர்டி ஆய்வுகள் தெரிவிக்கிறது.

கேந்திரியா வித்யாலயாஸ், நவோதயா வித்யாலயாஸ் மற்றும் சிபிஎஸ்இ இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிபர்கள் உட்பட 34,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட என்சிஇஆர்டி ஆய்வில் ஆன் லைன் கல்வியை நன்கு அறிந்திருக்கவில்லை என தெரியவந்து உள்ளது.

கல்வி அமைச்சகம் பகிர்ந்துகொண்ட ஆய்வுகளின்படி, அதன் ‘மாணவர்கள் கற்றல் மேம்பாட்டு வழிகாட்டுதலின்’ ஒரு பகுதியாக, ஆன்லைன் கற்றல் “கடினமான” அல்லது “சுமையாக” இருப்பதாக சுமார் 33 சதவீதம் பேர் உணர்ந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இந்த ஆய்வில் ஏறக்குறைய 27 சதவீத மாணவர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் கிடைக்காததைக் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் கல்விக்கான ஒரு ஊடகமாக அதிகபட்ச பங்குதாரர்கள் மொபைல் போன்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று என்என்சிஇஆர்டி ஆய்வு தெரிவிக்கிறது.

சுமார் 36 சதவீத மாணவர்கள் பாடப் புத்தகங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் பிற புத்தகங்களைப் பயன்படுத்தினர்.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிபர்களிடையே லேப்டாப்கள் இரண்டாவது விருப்பமாகும்.

தொற்றுநோய்ச் சூழ்நிலையில் கற்பித்தல் கற்றலுக்காக தொலைக்காட்சி மற்றும் வானொலி மிகக் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் ஆகும்.

மாணவர்களில் பாதி பேர் தங்களுக்கு பள்ளி பாடப்புத்தகங்கள் இல்லை என்று கூறினர். மின் பாடப்புத்தகங்கள் என்சிஇஆர்டி வலைத்தளம் மற்றும் டிக்ஷாவில் கிடைத்தாலும் மாணவர்கள் அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களிலிருந்து படிக்கப் பழகுகிறார்கள்,

ஒரு பாடமாக கணிதத்தை ஆன்லைன் ஊடகம் வழியாகக் கற்றுக்கொள்வது கடினம் என்று பெரும்பான்மையான பங்குதாரர்கள் சுட்டிக்காட்டினர்.

“கணிதத்திற்கு அடுத்ததாக, விஞ்ஞானம் கவலைக்குரிய விஷயமாக அடையாளம் காணப்பட்டது, ஏனெனில் இது ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் ஆய்வகத்தில் மட்டுமே செய்யக்கூடிய பல நடைமுறை சோதனைகள் உள்ளன.

ஒரு சிலர் சமூக அறிவியலைப் புரிந்துகொள்வதும் கடினமான விஷயமாக உள்ளது எனக் கூறி உள்ளனர்.