March 21, 2023

சென்னை டாஸ்மாக் திறக்கப் போறாஹ!

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த சில்லறை விற்பனை கடைகள் வருகின்ற 18-ஆம் தேதி முதல் திறக்கப்படும். மால்கள், மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் நாளை முதல் இயங்கும் எனவும், வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், மதுபானக் கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.