April 13, 2021

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு – இரண்டாண்டுகளாக குறைப்பு!

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப் பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு தற்போது மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2020-–2021-ம் கல்வி ஆண்டில் இருந்து இது இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ. படிக்க பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும். பி.காம், பி.எஸ்.சி., பி.ஏ., படித்தவர்கள் 12-ம் வகுப்பில் கட்டாயம் கணிதம் பாட எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.