December 4, 2022

அறிவாளிகள் என்றாலேயே திராவிடப் புண்ணாக்கர்களுக்கு அலர்ஜி!

எதேச்சையாகக் கண்ணில் தென்படும் தமிழ் தொலைக்காட்சி “விவாதங்கள்” என்னைத் துணுக்குறச் செய்கின்றன. இந்த அளவுக்கு மொண்ணைத்தனம் உள்ள ஒரே இனம், துர திருஷ்டவசமாகத் தமிழினம் மட்டும்தான். விவாதத்தை நடத்துகிறவன் நேர்மையற்ற, ஒரு பக்கச் சாய்வுள்ள அடிமூடன் என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதில் கலந்து கொண்டு “கருத்து” தெரிவிக்கிறவன் மூடனிலும் மூடனாக இருக்கிறான் என்பது என்னை இன்னும் வருத்தமுற வைக்கிறது. அடிப்படை அறிவோ அல்லது ஒரு பிரச்சினையைப் பற்றிய புரிதலோ இல்லா தவர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன தமிழ்த் தொலைக்காட்சி “விவாதங்கள்” என்பதில் சந்தேகமேயில்லை. இதையும் பார்த்து ரசிக்கிறவன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பது மட்டுமல்லாமல் இந்தப் பேத்தல்களை, உளறல்களை நம்புகிறான் என்று அறிய வருகையில் எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது.

வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட ஒழுங்காகப் படித்து அறியாத, தனது சொந்த நாட்டிற்கு எதிராக, தனது சொந்த மதத்து மக்களுக்கு எதிராக எதிர்மறையாகப் பேசுவதே அறிவாளித்தனம் என்று நம்புகிறவனே இவர்களில் அதிகம். வேறொரு நாட்டில் இவர்களை நாய் கூட முகர்ந்து பார்க்காது. அந்த அளவுக்கு அடிமுட்டாள்கள் இவர்கள். அவர்களின் “தலைவர்களோ” இன்னும் தமாஷானவர்கள். காசு கொடுத்தால் பெற்ற தாயையே கூட்டிக் கொடுக்கத் தயங்காதவனே தமிழகத்தில் தலைவன் எனச் சொல்லித் திரிகிறவன். ஒரு முட்டாள் கூட்டம் தங்களில் சிறந்த முட்டாளைத் தங்களின் தலைவனாகத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. உண்மையான அறிவாளிகளுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை. ஆனால் அவர்களை அழைத்துப் பேசவைத்தால் இவர்களின் அறிவு பல்லிளித்துவிடும் என்பதால் அவர்களின் பக்கம் தலைவைத்துக் கூடப்படுப்பதில்லை.

முட்டாள்கள் இன்னும் சில முட்டாள்களை அழைத்துவைத்து தங்களின் முட்டாள்தனமான கருத்துக்களைப் பிழிந்து சாறாக தமிழக முட்டாள்களுக்கு அளிப்பதுதான் தமிழக “தொல்லைக் காட்சி” சேனல்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்படிச் செய்கையில் அவர்களின் முகபாவம் இருக்கிறதே….அடடா! நாணம் கெட்ட பேடிகள்! நாற்பது வருடங்களுக்கு முன்னர் கூட இந்த இழி நிலை இருந்ததில்லை. தமிழக இலக்கியச் சூழல் ஓரளவிற்கு ஆரோக்கிய மாகவே இருந்தது. பத்திரிகைகளில் புத்திசாலித்தனமான, நேர்மையான கட்டுரைகள் எழுதப்பட்டன. விவாதிக்கப்பட்டன. ஆனால் அவற்றை திராவிடப் புண்ணாக்கர்கள் மெல்ல, மெல்ல திட்டமிட்டு அழித்தார்கள். தங்களை வளப்படுத்திக் கொள்ள ஒரே வழி தமிழர்களை சுய சிந்தனையற்றதொரு மூடர்கள் கூட்டமாக உருவாக்குவதுதான் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் துரதிருஷ்டம். இன்றைய தமிழன் உண்மையிலேயே சினிமாப் பித்துப்பிடித்த, குடிகார, சுய சிந்தனையற்ற மூடன். அவனை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம். ஏமாற்றலாம்.

முதலில் அடிப்படைக் கல்வியில் கை வைத்து தமிழர்களின் கல்வியைப் பாழாக்கினார்கள். நான் சிறுவனாக இருந்த காலத்தில் பள்ளிகளில் நிறைய பிராமண ஆசிரியர்கள் இருந்தார்கள். உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தவர்கள் அவர்கள். நானெல்லாம் ஓரளவுக்குப் படித்துத் தேறியிருக்கிறேன் என்றால் அதில் பெருமளவு பங்கு அவர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் மெல்ல, மெல்ல திராவிடச் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் பள்ளிகளில் நுழைக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒழுக்கமோ, சுய கட்டுப்பாடோ முற்றிலும் இல்லாதவர்கள் அவர்கள். எல்லோரும் அப்படி என்று பொதுவாகச் சொல்லவில்லை. அப்படியானவர்கள் கல்வித்துறைக்குள் அனுமதிக்கப்பட்டே இருக்கக்கூடாது என்பதுதான் என் வாதம். குடிகாரன், கூட வேலை செய்யும் ஆசிரியனின் பெண்டாட்டியைக் கவர்ந்து செல்கிறவன், “சோசலிசம்” என்கிற பெயரில் பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாராயம் குடிக்கிறவனெல்லாம் ஆசிரியர்களானது அப்போதுதான். தன்னிடம் படிக்க வருகின்ற மாணவிகளை சீரழித்தவன், சீரழித்துக் கொண்டிருப்பவனெல்லாம் கூட இன்றைக்கு ஆசிரியனாக எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறான்.

கட்சி சாயத்துடன் வேலைக்கு வந்த ஆசிரியன் அதையும் விட மோசமானவன். அவன் வேலை செய்து நான் பார்த்ததே இல்லை. அதுவே ஆளும் கட்சிக்காரன் என்றால் இன்னும் மோசம். என்னுடைய பத்தாம் வகுப்புத் தமிழாசிரியரான புலவர் வேதா என்கிறவர் அந்த கேட்டகரியைச் சார்ந்தவர். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக தன்னைக் காட்டிக் கொண்ட புலவர் வேதா வகுப்புக்கு வந்து பாடம் நடத்திய நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் (“உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தின் டைட்டில் பாடலான “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்” பாடலை எழுதியவர் இந்த வேதாதான்). அப்படியே வகுப்புக்கு வந்தாலும் “புரட்சித்தலைவர்” புகழ் பாடுவதிலேயே நேரம் கடந்துவிடும். எங்களின் பரிதாப நிலையைக் கண்டு அடுத்த வகுப்பு தமிழாசிரியர் எங்களுக்கும் சேர்த்து பாடம் நடத்தியதால் நான் தப்பித்தேன். பிராமண ஆசிரியர்கள் ஒருபோதும் அப்படி நடந்து கொண்டதில்லை.

இன்றைக்கு அவர்கள் பள்ளிகளிலிருந்து ஏறக்குறைய விரட்டியடிக்கப்பட்டுவிட்டார்கள். நஷ்டம் தமிழர்களுக்குத்தான். ஒழுங்கீனமான ஆசிரியர்களைப் பார்த்து வளர்கின்ற மாணவனும் ஒழுங்கீனமானவனாகவே வளர்கிறான். அதுவே இன்றைக்கு தமிழர்களின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியிருக்கிறது. எல்லா ஆசிரியர்களும் அப்படியானவர்கள் இல்லை. அர்ப்பணிப்புடன் வேலை செய்கிற ஆசிரியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. பாடம் நடத்துவதைவிடவும் சொத்து சேர்க்க அலைகின்ற ஆசிரியர்களே அதிகம். ஏனென்றால் அவர்களைக் கேள்வி கேட்பாரில்லை. கேட்கவும் முடியாது.

இன்னொருபுறம் தமிழ் சினிமா ஆசிரியர்கள் மீதான மரியாதையைக் குறைப்பதில் பெரிய பங்காற்றியிருக்கிறது. கல்வியைப் போதிக்கிற, கடவுளுக்கு நிகரான ஆசிரியர்களைக் கேலி செய்யும் திரைப்படங்களை டி. ராஜேந்தர் போன்ற அரைவேக்காடுகள் எடுத்துத் தள்ளினார்கள். அதுவே வகுப்பறைகளிலும் எதிரொலித்தது. ஒரு நல்ல ஆசிரியனை மதிக்காத மாணவன் வீணாய்ப் போனவன். அவனால் சமுதாயத்திற்குக் கேடுதான்.

இன்றைய தமிழனின் பெரும் பிரச்சினை அவனது அறியாமைதான். அந்த அறியாமையே அவனை ஒரு “ஞானியைப் போல” பேச வைக்கிறது. அந்த அறியாமையை மறைக்க அவன் எடுத்த ஆயுதம் கேலியும், கிண்டலும்தான். அதிலும் உண்மையான, மெத்தப்படித்த மேதாவி களைக் கண்டால் அவனுக்கு உடனடியாக பொச்சில் மிளகாயைத் தேய்த்ததுபோல ஆகி அவனை எப்படியாவது மட்டம் தட்டத் துடியாய் துடிக்கிறான். அதற்குத் தோதாக தொலைக் காட்சி விவாதங்கள் இருக்கின்றன. பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்கள் அடி மூடர்களான திராவிடப் புண்ணாக்கர்களுக்குச் சொந்தமானவை. அறிவாளிகள் என்றாலேயே திராவிடப் புண்ணாக்கர்களுக்கு அலர்ஜி. எனவே அவர்களின் கைத்தடிகளை விட்டு உளறிக் கொட்டுகிறார்கள். சிரிப்புத்தான் வருகுதைய்யே!

ஸ்ரீநரேந்திரன் பி. எஸ்