August 4, 2021

ஊஹூம்.. அதுக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்!

”சீன படை நம்ம எல்லைக்குள்ள ஊடுருவி வரல. நம்ம நிலத்துல ஒரு இஞ்ச் கூட ஆக்கிரமிக் கல”னு சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்ல பிரதமர் சொன்னார். “உங்க ஆளுங்க கோடு தாண்டி எங்க எல்லைக்குள்ள வந்து ஆக்கிரமிச்சு இருக்காங்க. எங்க ஜவான்கள அநியாயமா கொன்னு ருக்காங்க”னு சீன வெளிநாட்டு அமைச்சர்ட்ட நம்ம வெளிநாட்டு அமைச்சர் ரெண்டு நாள் முன்னாடி ஃபோன்ல கண்டிச்சார்.

அமைச்சர் அப்டி சொன்னார், பிரதமர் இப்டி சொல்றாரே?னு பலருக்கு குழப்பம். அத கேட்டாங்க.

“பிரதமர் சொன்னது அன்னக்கி இருந்த நிலைமைய. அத திரிச்சு விசம தனமா கேள்வி கேக்றது தப்பு”னு பிரதமர் அலுவலகம் பக்காவா விளக்கம் குடுத்துது. குழப்பத்த தீக்கதுக்கு குடுத்த விளக்கம் குழப்பத்த அதிகம் ஆக்கிருச்சாம்.

”பிரதமர் பேசினது டீவில நேரடியா ஒளிபரப்பு ஆச்சு. எல்லாரும் நேர கேட்ட விசயத்துக்கு விளக்கம் எதுக்கு..”ங்றாங்க.

எதிர் கட்சிகள் விவஸ்த இல்லாம பிரதமர விமர்சனம் பண்ணுதுனு பாத்தா, வெளிநாடுகளும் அதே வேலய செய்யிது.

”இந்திய மக்கள் என்னதான் கொந்தளிச்சாலும், சீனாவோட இப்ப நேரடியா மோதுறது புத்திசாலி தனம் இல்லைனு இந்திய பிரதமர் தெளிவா இருக்கார். அவர் பேச்சுக்கு அவரே குடுத்த விளக்கம் இதத்தான் உணர்த்துது” அப்டீனு வெளிநாட்டு பத்திரிகைகள் எழுதுது. இவ்ளவுக்கும் அதெல்லாம் நமக்கு சப்போட்டா இருக்ற நாடுகள், பத்திரிகைகள்.

ஜப்பான் நம்மகிட்ட ரொம்ப நட்போட இருக்ற நாடு. அங்கயும் ஒரு பெரிய்ய பத்திரிகை, “சீனா பகிரங்கமா தப்பு செஞ்சாலும் அத கண்டுக்காம விட வேண்டிய சூழல்ல இந்தியா இருக்கு. அதத்தான் பிரதமரோட பேச்சு காட்டுது”னு கேனத்தனமா எழுதிருக்கு.

வேலவெட்டி இல்லாம உக்காந்திருக்ற ராகுல் காந்தி அத காமிச்சு, ”நரேந்தர் மோடி இப்ப சுரேந்தர் மோடி ஆயிட்டார்”னு ட்வீட் பண்ணார். சும்மா விடுவாங்களா பிரதமரோட ஃபேன்ஸ். “ராகுலுக்கு பேசிக் இங்லிஸ் அறிவுகூட இல்ல. சரண்டர்னு எழுத தெரியாம சுரேந்தர்னு தப்பா எழுதுறார்”னு கிண்டல் செய்றாங்க. சரண்டருக்கும் சுரேந்தருக்கும் இங்லிஷ்ல ஒரு எழுத்துதான் வித்யாசம். Surender. இதுல இன்னொரு ‘ஆர்’ சேத்தா Surrender.

”நரேந்தர் ஒரு பேரு. சுரேந்தர் ஒரு பேரு. நரேந்தர்ங்றத எங்காளு சுரேந்தர்னு மாத்தினாரு. ஆனா அவங்க அத சரண்டர் மோடினு கரெக்டா திருத்றாங்க”னு சொல்லி காங்ரஸ்ல சிரிக்கிறாங்க.

கொஞ்சங்கூட பொறுப்பே கிடையாது இந்த ராகுலுக்கு. இத அனைவரும் பலமா கண்டிக்கணும். தேசப்பற்றுன்னா என்னானே தெரியாத பரம்பரைல வந்தவர்ட்ட வேற என்ன எதிர்பாக்க முடியும், சொல்லுங்க?

கதிர்