கொரோனா? ; புது இணைய தளம்., நியூ எமெர்ஜென்சி நம்பர்! -தமிழக அரசு ஏற்பாடு!

கொரோனா? ; புது இணைய தளம்., நியூ எமெர்ஜென்சி நம்பர்! -தமிழக அரசு ஏற்பாடு!

கொரோனா நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் படுக்கை விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘ஸ்டாப் கொரோனா’ என்ற இணைய தளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க காலியாக இருக்கும் படுக்கை வசதி குறித்து பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவே கண்டறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் கூறியிருப்பதாவது:–

கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் உரிய வழிமுறைகளை அரசு வெளியிட்டது.

மேலும், அரசு ருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.

அப்போது தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தாமாகவே சேவை மனப்பான்மை யுடன் முன்வந்து அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்கு ஒதுக்கி இந்த பேரிடர் காலத்தில் அரசுடன் இணைந்து செயலாற்றுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் ஒவ்வொரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும், உடனடியாக தங்கள் மருத்துவமனைகளுக்காக ஒரு பொறுப்பு அலுவலரை நியமிக்கவும், அவர் மூலமாக தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள “stop corona” இணையதளத்தின் வாயிலாக மருத்துவமனையில் உள்ள வசதிகள், படுக்கைகளின் எண்ணிக்கைகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை (Facility, Occupancy, Vacancy) ஆகியவற்றை அவ்வபொழுது வெளிப்படைத்தன்மை யுடன் பதிவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்மூலம், பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், படுக்கை வசதிகள் ஆகியவற்றை அறிந்து, சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அமையும். மேலும், இப்பேரிடர் காலத்தில் பொதுமக்களிடமிருந்து அச்சத்தை போக்கி அரசு மீதும் தனியார் மருத்துவ மனைகளின் மீது ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் அமையும் என தெரிவித்தனர்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் இந்த கோரிக்கையை தனியார் மருத்துவமனைகள் ஒரு மனதாக ஏற்று தங்களிடம் உள்ள அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை கொரோனா நோய் சிகிச்சைக்கு ஒதுக்கீடு செய்யவும், மேற்சொன்ன இணையதளத்தில் அனைத்து விவரங்களை யும் அவ்வப்போது பதிவேற்றம் செய்யவும் தங்களது ஒப்புதலை தெரிவித்தார்கள்.

மேலும் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்புகளை கையாளும் விதமாகவும், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்று அப்பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்பவும்,

நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும்.

இதன் மூலம் கொரோனா கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை முறைகள் மேலும் தமிழ்நாட்டில் வலுப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!