December 9, 2022

மெல்லிசை மன்னர்களின் குரு S M. சுப்பையா நாயுடு!

மிழ்த் திரை இசையின் பிதா மகன் – S M சுப்பையா நாயுடு. – இவர் மெல்லிசை மன்னர்களின் குரு என்றே அழைக்கப்பட்டவரின் நினைவு நாளின்று!

இவர்தான் முதல் முதலில் பின்னணியில் பாடுவதை தமிழ்த் திரையில் அறிமுகப்படுத்தியவர்,

டி எம் எஸ் பாடிய முதல் திரைப்பாடலுக்கு இசையமைத்தவர்,

எம் ஜி ஆரின் முதல் கொள்கைப்பாடலுக்கு இசையமைத்தவர்,

கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசையமைத்தவர்,

எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த முதல் பாடலை திரையில் ஒலிக்க செய்தவர் –

19ஆம் நூற்றாண்டில் தமிழை வாழவைத்த தெய்வீகக்கவிஞர் வள்ளலார். அவருடய பெருமை யுடன் “நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்ற விருத்தத்தை மிகவும் நேர்த்தியாக சூல மங்களம் ராஜ லக்ஷ்மியின் குரலில் தவளவிட்டவர்.

இத்தனை சிறப்புகளையும் ஒருங்கே அமையப் பெற்ற இவர்தான் – தென்னிந்திய திரை இசை உலகில் “சங்கீதையா” என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு எஸ் எம சுப்பையா நாயுடு.

இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த MUSIC CONDUCTORம் கூட. இவரது மெட்டுக்கள் அனைத்தும் உடனடி HITS ஆக விளங்கின. J P சந்திரபாபுவை குங்குமப்பூவே பாடலின் மூலம் ஒரு சிறந்த பாடகராக உருவாக்கினார். இவரது இசையில் எஸ் ஜானகி பாடிய சிங்கார வேலனே தேவா பாடல் பெரும் புகழ் பெற்ற பாடல். இன்றும் ஜானகி அவர்கள் இந்தப் பாடலைத்தான் தனது தலைசிறந்த பாடலாக குறிப்பிடுகிறார். கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் காலத்தால் அழியாது சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று. காரைக் குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு போட்டியாக ஜானகியின் குரல் ஒலித்தது. சிங்கார வேலனே தேவா என்ற பாடலுக்கான நாதஸ்வர இசையை ஒலிப்பதிவு செய்து விட்டு நாதஸ்வர ஸ்ருதிக்கேற்ப பெண் குரலைத் தேடினார்கள். பி.லீலா, லதா மங்கேஸ்கர் எனப்பலரும் நாயனத்தின் சுருதிக்கு இசைவாக பாட தங்களால் முடியாது எனக் கூறிவிட்டனர். நாதஸ்வர இசைக்கு லீலாவின் குரல் இசைவாக இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் சென்று கேட்டார்கள். ஜானகியின் குரல் நாதஸ்வர இசைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று லீலா கூறினார். லீலாவின் கூற்று பொய்க்கவில்லை. நாதஸ்வர இசைஎது ஜானகியின் குரல் எது என்ற வேறுபாடு காண முடியாத வகையில் இரண்டும் இணைந்துள்ளன.1962ஆம் ஆண்டு தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசையையும், ஜானகியின் பாடலையும் ஒன்றாக ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவாளர் ஜீவா பாராட்டுக்குரியவர்.ஆமேரி ராகத்தில் அமைந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல்தான் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது.

மேலும் .M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி, G K வெங்கடேஷ் போன்றோர் இவரிடம் உதவியாளர்களாக இருந்தது குறிப்பிடத் தக்கது

இவரது இசையில் பாடிய பாடக நடிகர்கள்:

P U சின்னப்பா, C ஹொன்னப்ப பாகவதர், N C வசந்தகோகிலம், U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K R ராமசாமி, சித்தூர் V நாகைய்யா, N S கிருஷ்ணன், T A மதுரம், P பானுமதி, S வரலக்ஷ்மி, J P சந்திரபாபு ஆகியோர்.

இவரது இசையில் பாடிய பிரபல பாடகர்கள்:

C S ஜெயராமன்,T M சௌந்தரராஜன், கண்டசாலா,A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T A மோதி, P B ஸ்ரீனிவாஸ், S C கிருஷ்ணன், A L ராகவன், M L வசந்த குமாரி, P A பெரியநாயகி, P லீலா, ஜிக்கி, T V ரத்தினம், A P கோமளா , ராதா ஜெயலக்ஷ்மி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனா ராணி, P சுசீலா, K V ஜானகி, S ஜானகி,, L R ஈஸ்வரி போன்றோர்.

இவரது சில பிரபல பாடல்கள்:

திருடாதே பாப்பா திருடாதே – திருடாதே.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – மலைக்கள்ளன்,
தூங்காதே தம்பி தூங்காதே – நாடோடி மன்னன்,
சிங்கார வேலனே தேவா – கொஞ்சும் சலங்கை,
நீ எங்கே என் நினைவுகள் அங்கே – மன்னிப்பு,
மாலை மயங்குகிற நேரம், பச்சை மலை அருவியோரம் – மரகதம்,
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை – அன்னையின் ஆணை,
எத்தனை செல்வங்கள் வந்தாலுமே – தாயின் மடியில்,
கண்ணில் வந்து மின்னல் போல் – நாடோடி மன்னன், ஆகிய சில.