September 21, 2021

75 வயது முதியவருக்கு செயற்கை இருதயம்: பிரான்ஸ் டாக்டர்கள் சாதனை!

பிரான்ஸ் மருத்துவர்கள் லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் செயற்கையான மனித இதயத்தை உருவாக்கினார்கள். இந்த செயற்கை இதயத்தை முதல் முறையாக தலைநகர் பாரிசில் உள்ள ஒரு மருத்துவமனையில் 75 வயது முதியவருக்கு பொருத்தி வெற்றிகரமாக இயங்க செய்தனர். உயிருள்ள உறுப்பை போன்று இயங்கும் இந்த செயற்கை இருதயம் 5 வருடங்கள் வரை ஒருவரின் ஆயுளை நீட்டிக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இதை உடலுக்கு வெளியில் பொருத்தியும் இயங்கச் செய்ய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tec heart_artificial_23
பிரான்ஸ் நாட்டில் உள்ள கார்மத் என்ற உயிர் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் இந்த செயற்கை இருதயத்தை வடிவமைத்துள்ளது. காது மிஷின் போலவே, இந்த செயற்கை இருதயம், உடலில் வெளி யில் பொருத்தக்கூடிய லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும்.பாரிசில் உள்ள ஜார்ஜஸ் பிராம்ட்யு மருத்துவமனை நிபுணர்கள் இந்த செயற்கை இருதயத்தை 75 வயது முதியவருக்கு பொருத்தியுள்ளனர். இவருக்கு இருதயம் பழுதுபட்டதை தொடர்ந்து செயற்கை இருதயம் பொருத்தப்பட்டது. இப்போது செயற்கை இருதயம் சிறப்பாக இயங்கி வருகிறது என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கு முன்பும் செயற்கை இருதயம் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக மாற்றாகதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற் கிடையில் உலகில் முதன் முறையாக இப்போது தான் வாழ்நாள் 5 ஆண்டு நீடிக்கும் வகையில் செயற்கை இருதயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடல் ஏற்க வேண்டும் என்பதால், இந்த செயற்கை இருதயமும், அதற்கு தேவையான திசுக்கள் உட்பட துணை பொருட்களும் கால்நடை உயிரினங்கள் மூலமாக எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள் ளது.ஒரு கிலோவுக்கும் குறைவான எடை யில் செயற்கை இருதயம் உள்ளது. இயற்கை இருதயத்தை விட அதிக எடை தான்.

எனினும் உயிரின திசுக்கள் மூலம் தசைகள் உட்பட எல்லாம் பொருத்தப்படுவதால் இருதயத்துக்கு ரத்தம் பாய்வதில் எந்த சிக்கலும் இருக்காது. நோயாளி இப்போது மாமூல் நிலைக்கு வந்து விட்டார். அவர் சிறிது சிறிதாக நடக்க அனுமதிக்கப்படுகிறார். எந்த கோளாறும் இதுவரை ஏற்படவில்லை என்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர்

வீடியோ செய்தி:https://www.youtube.com/watch?v=DHEJ8oac7Xw
75 Year Old French Man Receives the World’s First Artificial Heart Transplant, Performed In France
********************************************************************
A 75 year old French man became the first man in the world who has been transplanted with an artificial heart . It is hoped that the new heart will give patients up to five years of extra life.