March 22, 2023

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் முழு ஊரடங்கை ஏப்ரல் 14 ஆம் தேதியிலிருந்து மேலும் 2 வார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதை பிரதமர் இன்று குறிப்பாக மாநில முதலமைச்சர்களிடம் காணொலி காட்சி மூலம் உரையாடியபோது தெரிவித்தார்.

இரு வார ஊரடங்கு நீடிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிகள் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீடிக்கப்படும் ஊரடங்கு காலத்தில் சில பொருளாதார நடவடிக்கைகளைத் துவக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

விவசாய நடவடிக்கைகளுக்கான அனுமதி தொடரும் கட்டுமான தொழில் அனுமதிக்கப்படும் என தெரிகிறது இதற்கான வழிகாட்டு நெறிகள் தயாராகிறது எனவும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி குறிப்பிட்டார்.

எல்லா மாநிலங்களிலும் ஊரடங்கு மீறல்கள் இடம்பெறுவதும் ஒருவருக்கொருவர் பின்பற்றவேண்டிய இடைவெளி தொடர்பான விதி மீறப்படுவதும் கவலை தருகிறது இந்த மீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் கூறினார்.

சில மாநிலங்களில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது பெரிதும் வருத்தம் தருகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வேறு சில இடங்களில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மாணவர்களுக்கு தொந்தரவு தரப்பட்டுள்ளது. இதுவும் வருத்தமளிக்கிறது. இந்த விஷயங்கள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.