டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது மர்ம ஆசாமி துப்பாக்கிச் சூடு: மாணவர் காயம் – வீடியோ!

டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் போது மர்ம ஆசாமி துப்பாக்கிச் சூடு: மாணவர் காயம் – வீடியோ!

தலைநகர் டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஷாதாப் பாரூக் என்பவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு கூச்சலிட்டுக் கொண்டே சென்றார்.

காயமடைந்த மாணவர் ஷாதாப் பாரூக், அவர் மாஸ் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். அவரது இடது கையில் காயம் அடைந்து உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், மர்ம நபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறிய சில மணி நேரத்திலேயே பேஸ்புக் நிறுவனம் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை முடக்கியுள்ளது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு பேஸ்புக்கில் இடமில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பேஸ்புக் கணக்கை நாங்கள் நீக்கியுள்ளோம். மேலும் துப்பாக்கிச் சூடு அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பாராட்டும் மற்றும் ஆதரிக்கும் பதிவுகளையும் கண்டறிந்து நீக்கவுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன்னதாக ஜனவரி 31-ஆம் தேதி, ஷஹீன் பாக் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அவர் பல்வேறு பதிவுகளைப் போட்டுள்ளார். ஷஹீன் பாக் பகுதியில் வசிக்கும் பெண்கள் உட்பட பலர் சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, “சந்தன் பாய், இந்த பழிவாங்கல் உங்களுக்கானது” என்று பதிவிட்டுள்ளார். சந்தன் என்பவர் உத்தரப் பிரதேச வன்முறையில் உயிரிழந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!