இலங்கை அதிபர் தேர்தல் – கோத்தபய ராஜபக்சே வெற்றி! – விரைவில் ராஜபக்சே பிரதமர்? முழு விபரம்!

ஸ்ரீலங்கா ஆகிய இலங்கை சட்டப்படி முதல் எண்ணிக்கையிலேயே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அடுத்து இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோத்தபய தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கை யின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்; தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன, இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய வெற்றி பெற்றார். அவர் 51 சதவீத வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டா பாயவுக்கு ந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்திற்கு இலங்கை அதிபர் கோட்ட பாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச 42 சத வீத வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளார்.

சனிக்கிழமை வாக்குப் பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் சஜித் முன்னிலை

எனினும், தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார் சஜித் பிரேமதாச.

யாழ்ப்பாணம் மாவட்டம்: சஜித் பிரேமதாச – 3,12,722 கோட்டாபய – 23,261

வன்னி – முல்லைத் தீவு (உள்நாட்டுப் போரில் இறுதி யுத்தம் நடந்த பகுதி):சஜித் பிரேமதாச – 47,594 (86.19%) கோட்டாபய – 4,252 (7.70%)

கிளிநொச்சி மாவட்டம்: சஜித் பிரேமதாச – 55,585 கோட்டாபய ராஜபக்ச – 3,238

வவுனியா மாவட்டம்: சஜித் பிரேமதாச – 65,141 கோட்டாபய ராஜபக்ச – 13,715

முல்லைத்தீவு மாவட்டம்: சஜித் பிரேமதாச – 47,594 கோட்டாபய ராஜபக்ச – 4,252

மன்னார் மாவட்டம்: சஜித் பிரேமதாச – 53,602 கோட்டாபய ராஜபக்ச – 6,435

அஞ்சல் வாக்குகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அளித்த அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் தொகுதிக்கான அஞ்சல் வாக்களிப்பின் பிரகாரம், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 17,961 வாக்குகளை பெற்று முன்னிலையில் திகழ்கின்றார். கோத்த பய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அஞ்சல் வாக்களிப்பில் 1,563 வாக்குகளை பெற்று உள்ளார். தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் வெளியான தபால் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 810 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனிடையே தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தனது 26 வருட அரசியல் வாழ்க்கையில் தன்னுடன் பயணித்த ஆதரவாளர்களுக்கும் சஜித் பிரேமதாஸ நன்றியை தெரிவித்துள்ளார். சுதந்திரமாகவும், நீதியானதுமான தேர்தலை நடத்த அர்ப்பணிப்போடு செயற்பட்ட தேர்தல் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

அடிசினல் ரிப்போர்ட்:

அடுத்து ராஜபக்சே பிரதமராவாரா?

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, 2005-ஆம் ஆண்டு முதல் 2014 வரை மகிந்த ராஜபக்சவின் அரசில் பாதுகாப்புத்துறைச் செயலாளராக பணியாற்றியவர். ஆம்.. இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சே, மிகவும் கண்டிப்பானவர். இலங்கையில் தமிழ் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தியது இவர்தான். அதேபோல் அங்கு போர் குற்றங்களை செய்ததாக குற்றஞ்சாட்டப்பவரும் இதே கோத்தபய ராஜபக்சேதான்.

1980-ஆம் ஆண்டு அசாமில் பாதுகாப்புத்துறை தொடர்பான பட்டப்படிப்பையும், 1983ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான முதுகலை பட்டத்தையும் கோத்தபய ராஜபக்ச பெற்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரை நிகழ்த்திய கோத்தபய ராஜபக்ச. இலங்கை போரின் போது ஐநாவிற்கு எதிராக செயல்பட்டது, ஊடகங்களை முடக்கியது, பெண்களை துன்புறுத்தியது என்று இவருக்கு எதிராக உலக அளவில் நிறைய புகார் எதிரொலித்தது. அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் வலம் வந்த கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் நிற்பதற்கு சில நாட்களுக்கு முன்தான் அதை துறந்தார்.

அதேநேரத்தில் சீனாவுக்கு மிக நெருக்கமானவராகவும் கோத்தபய ராஜபக்ச அறியப்படுகிறார். பலமுறை சீன பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் இந்தியாவுடன் கோத்தபயவுக்கு பெரிய அளவில் நெருக்கம் கிடையாது.

மேலும் தேர்தல் முடிவுகளின் மூலம் தற்போது அவருக்கான மக்கள் ஆதரவும் வெளிவந்துள்ளது. தன்னுடைய குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வர மாட்டேன் என்று கோத்தபய ராஜபக்சே பிரச்சாரத்தில் தெரிவித்தார். ஆனால் கண்டிப்பாக இவர் அண்ணன் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக விரைவில் நியமிப்பார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

70 வயதான கோத்தபய ராஜபக்ச பெற்றுள்ள வெற்றி, இலங்கை அரசியலின் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.