March 21, 2023

ஜியோ & வோட போன் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ 94 கோடியை செலுத்தியது!

ஜியோ மற்றும் வோட போன் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான நிலுவைத் தொகை ரூ 94 கோடியை அந்த இரண்டு நிறுவனங்களும் செலுத்தியுள்ளன. வோடா போன் நிறுவனம் .54.52 கோடி ரூபாயும், ஜியோ நிறுவனம் 39.1 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளன.

அலைக்கற்றைக்காக தொலைத்தகவல் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை கூடுதலாக இருப்பதால் அவற்றை சுலப தவணைகளில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன.

இதனடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பத்து தவணைகளில் செலுத்த வேண்டிய அலைக்கற்றை தவணை தொகையை 16 தவணைகளில் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் வோடபோன் நிறுவனமும் ஜியோ நிறுவனமும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை இப்பொழுது செலுத்தியுள்ளன.

வோடபோன் நிறுவனம் கூடுதலான தவணைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.