விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக். 21ம் தேதி இடைத் தேர்தல்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக். 21ம் தேதி இடைத் தேர்தல்!

தமிழ் நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன், இந்தியா முழுவதும் 64 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாகவும், மனுதாக்கல் வரும் 23ஆம் தேதி தொடங்குவதாகவும் அவர் கூறினார். மனு தாக்கலுக்கு வரும் 30ஆம் தேதி கடைசி நாள், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 3, வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும். அக்டோபர் 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் தவிர, புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடாகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் உள்ளிட்டு 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Related Posts

error: Content is protected !!