October 27, 2021

2018ம் ஆண்டு தேசிய விருதுகளின் பட்டியல் முழு விவரங்கள்!

நம் நாட்டில் தயாராகும் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது மத்திய அரசு. இதன்படி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலிருந்து விருதுக்கான வர்களைத் தேர்வுசெய்ய இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இம்தியாஸ் ஹுசைன், பாடலாசிரியர் மெகபூப், தமிழ் நடிகை கௌதமி, கன்னட திரைப்பட இயக்குநர் பி.சேஷாத்ரி, அனிருத் ராய் சவுத்ரி, ரஞ்சித் தாஸ், ராஜேஷ் மபுஷ்கர், திரிபுராரி ஷர்மா மற்றும் ரூமி ஜெஃப்ரி ஆகியோர் இடம்பெற்றி ருந்தனர். இவர்கள், கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக விருதுக்கு விண்ணப்பித்திருந்த பல மாநில மொழித் திரைப்படங்களையும் பார்த்து, தேர்வு செய்திருந்தனர்.

அப்படி தேர்ந்தெடுக்கப்ப்ட்ட 2018ம் தேசிய விருதுகளின் பட்டியல் விவரங்கள் இதோ::

தாதா சாகேப் பால்கே விருது : பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா

சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (மலையாளம்-பயனகம்)

சிறப்பு விருது பெறும் நடிகர் : பங்கஜ் திரிபாதி (நியூட்டன்)

சிறப்பு விருது பெறும் நடிகை : பார்வதி (டேக் ஆஃப்)

சிறப்பு விருது பெற்ற பிறமொழி படங்கள்:

மூரக்யா (மராத்தி படம்),

ஹலோ ஆர்சி (ஒடியா படம்),

டேக் ஆஃப் (மலையாளம்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் : பாகுபலி 2

சிறந்த ஆக்‌ஷன் இயக்கம் : பாகுபலி 2

சிறந்த பிறமொழி படம் : லதாக்

சிறந்த மராத்தி படம் : கச்சா லிம்பு

சிறந்த ஹிந்தி படம் : நியூட்டன்

சிறந்த மலையாள படம் : தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியம்

சிறந்த தெலுங்கு படம் : காஸி

சிறந்த பெங்காலி படம் : மயூராக்‌ஷி

சிறந்த அஸ்சாமிஸ் படம் : வில்லேஜ் ராக்ஸ்டார்

சிறந்த நடிகர் : ரித்தி சென், நாகர் கிர்தான்

சிறந்த நடிகை : ஸ்ரீதேவி (மாம்)

சிறந்த துணை நடிகர் : ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியம்)

சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா (இராதடா-ஹிந்தி படம்)

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர்.ரகுமான் (மாம்)

சிறந்த பின்னணி பாடகர் : கே.ஜே.யேசுதாஸ் (பாடல்: பொய் மரேஞா காலம்; படம்: விஸ்வரூபம் மன்சூர்)

சிறந்த பின்னணி பாடகி : ஷாஷா திரிபாதி (பாடல்: வான் வருவான்; படம்: காற்று வெளியிடை)

சிறந்த பாடலாசிரியர் : முத்து ரத்னா (மார்ச்.22 கன்னட படம்)

சிறந்த பொழுதுபோக்கு படம் : பாகுபலி 2

சிறந்த நடன இயக்கம் : கணேஷ் ஆச்சார்யா (டாய்லெட் ஏக் பிரேம் கதா)

சிறந்த திரைக்கதை : தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியம்

ஜூரி சிறப்பு விருது : நாகர் கிர்தான் (பெங்காலி)

விருதுகள் வென்ற தமிழ் படங்கள்

சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர்.ரகுமான் (மாம்)

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணி பாடகி : ஷாஷா திரிபாதி (பாடல்: வான் வருவான்; படம்: காற்று வெளியிடை)

தமிழில் சிறந்தத் திரைப்படம் – டூ லெட் (To Let)

டூ லெட் திரைப்படத்தைப் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை தொகுத்து எடுக்கப்பட்ட படமாகும். இதில் ஒரு சிறிய குடும்ப, இரு சக்கர வாகனத்தில் வாடகை வீடு தேடி அலைகிறது. தற்போது வசிக்கும் இல்லத்தில் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்திய நிலையில் மற்றொரு வாடகை வீடு கண்டுபிடித்து மாற 30 நாட்களே உள்ளன. இறுதியில் இந்த சிறிய குடும்பம் தங்களுக்கான வசிப்பிடத்தை கண்டுப்பிடிப்பார்களா என்பதே கதையின் முடிவு. சமூக உண்மைகளை எடுத்துரைக்கும் இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளிவராத நிலையிலும், ‘சிறந்த தமிழ்த் திரைப்பட’ விருதை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேசிய விருதுகள் வழங்கும் விழா மே மாதம் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.