June 25, 2022

ஹவுஸ் ஓனர் – விமர்சனம்!

நம் தமிழகத்தில் பல பேருக்கு சினிமாதான் பொழுதுபோக்கு. இதே சினிமாதான் தனக்கு எல்லாம் என்று சொல்லும் சிலருமுண்டு. இதே தமிழகத்தில் பலரின் இன்னொரு சுவாசமான அரசியலை விட சினிமாவால் உண்டாகும் தாக்கம் தான் பெரியதுதான். காரணம் அரசியல் வாதிகள் ஆயிரம் பேசினாலும் மக்களுக்கு பயனளிக்காத வகையில் அந்த பேச்சுக்கள் நிராகரிக்கப்படும். ஆனால் சினிமா எந்த பயனும் கொடுக்காவிட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். அப்படியாப்பட்ட உடகத்தை வெகு சிலரே புரிந்து அதன் மூலம் தன் திறமையை வெளிகாட்டி அசத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் முகஞ்சுளிக்க வைக்கும் குடும்பப் பஞ்சாயத்துக்களின் நடுவராக இருந்து பிரபலமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய சகல தரப்பும் படம்தான் ‘ஹவுஸ் ஓனர்’.

கதையின் நாயகன் கிஷோர் ரிட்டயர்ட் மிலிட்டரி ஆபிசர். நினைவிழப்பு நோய். (அல்சைமர்ஸ்) அருகில் இருக்கும் தன் மனைவியை வேறு யாரோ என பாவிக்கும் அளவிற்கு மறதி கொண்டவர். அப்படியாப்பட்டவர் வாழ்க்கையை ஏதோ குளறுபடியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னையில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக வீதியெங்கும் வெள்ளப்பெறுக்கு ஏற்பட அனைவரும் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் இந்த அடம் பிடிக்கும் அல்சைமர் வியாதிக்காரர் கிஷோரும் அவரது மனைவியும் மட்டும் உயிராய் நேசிக்கும் வீட்டைவிட்டு வெயேற மறுக்கிறார்கள். வெள்ளத்தால் வீடு மூழ்க வயதான இந்த கணவன், மனைவி என்னவானார்கள் அந்த வீட்டில் என்பதுதான் ஒட்டு மொத்த படத்தின் கதை.

எடுஹ்துக் கொண்ட கதைக்கு பொருத்தமான ஆர்டிஸ்டுகளை தேர்தெடுத்ததிலேயே லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஜெயித்து விட்டார். ஆடுகளம் கிஷோர் நல்ல கைதேர்ந்த நடிகர் என்பதை த்த பல்வேறு படங்களில் நிரூபித்திருக்கிறார். இந்த படத்திலும் தனக்கேயுறிய நடிப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இவருக்கு அலசைமர் நோயாளியாக நொடியில் மறந்து பேசியதையே திரும்ப திரும்ப பேசும் பாத்திரம். கொஞ்சம் எகிறினாலும் ஓவர் ஆக்டிங் ஆகி விடக்கூடிய சூழலை புரிந்து எல்லை தாண்டாமல் சபாஷ் சொல்ல வைக்கிறார் கிஷோர். இவருக்கு ஜோடியாக நடித்துள்ள ரஞ்சினி. கணவரான கிஷோரின் அடாவடி போக்கால் பார்வையாளனே வெறுப்படையும் போக்கு வந்தாலும் தணியாத அன்பை பார்வை மூலமே வெளிப்படுத்தி தனிக் கவனம் பெறுகிறார்.

சிறு வயது கிஷோராக “பசங்க” படம் கிஷோர் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். ஆனால் அந்த புள்ளையஆண்டனுக்கு அவா பாஷை சரியாக வரவில்லை. ரஞ்சினியாக நடித்திருக்கும் லவ்லின் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக முடித்துக்கொடுத்திருக்கிறார்.

இளவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ள பசங்க கிஷோரும் மிகையில்லாமல் நடித்திருக்கிறார். அவருக்கு பாலாக்காடு பிராமண பாஷை அவ்வளவாக ஒட்டவில்லை. ராணுவ வீரருக்கான உடல்வாகுக்கும் அவர் உழைத்திருக்கலாம். இளம் வயது ஸ்ரீரஞ்சினியாக நடித்துள்ள லவ்லின் சந்திரசேகர் அல்டிமேட் தேர்வு. கண்கள் பேசும் வசனங்களும் வசனம் பேசுகையில் அவர் கண்களும் கொண்டாட வைக்கின்றன.

படத்தின் முக்கியமான நாயகன் ஜிப்ரான். பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு இதய ஈர்ப்பு சக்தி இருக்கிறது. கதையை இசை அழகாக உணர வைக்கிறது. தபஸ்நாயக் ஒலி வடிவமைப்பை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். மழை ரோட்டில் விழும் போதும், வீட்டில் விழும் போதும் எழும் ஒலி வேறுபாடு அழகாக கேட்கிறது.

ஆனாலும் ஒரு டாகுமெண்டரி படத்துக்குண்டான ஃபீலீங் உருவாவதை தவிர்க்க இயலவில்லை

மார்க் 3 / 5