ஸ்டார் ஓட்டல்களில் கிச்சனுக்குள் நுழைய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி!

ஸ்டார் ஓட்டல்களில் கிச்சனுக்குள் நுழைய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி!

நட்சத்திர ஓட்டல்களாய் இருந்தால் வருமான வரியில் சலுகை, அயல் நாடுகளில் விளம்பரம் செய்ய அனுமதி, இறக்குமதி வரிச் சலுகை, கடனுதவி ஆகியவற்றை இந்திய அரசாங்கம் வழங்கு வதால் பலர் தங்கள் ஓட்டல்களுக்கு எப்படியாவ்து ஸ்டார் அந்தஸ்து வாங்கி விடுகிறார்கள். ஆனால் அப்படி வாங்கிய நிலையில் உள்ளே வரும் கஸ்டமர்களை கஷ்டப்படுத்தும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இனிமேல், நட்சத்திர ஓட்டல் சமையலறைக் குள் உணவு தரமாக சமைக்கப்படுகிறா என்பதை அறிந்துகொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று (ஜூன் 26) தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறை மற்று ம் தர நிர்ணயக் குழுவால் உணவகங்களுக்கு தர வரிசை நிர்ணயிப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், சென்னை எழும்பூரில் ரமடா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அனைத்து நட்சத்திர ஹோட்டல்களின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், நட்சத்திர ஓட்டல்கள் 10 கட்டளைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

அந்த 10 கட்டளைகள் இதுதான் :

உணவகத்தின் சமையல் அறையில் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களின் புகார்களை சரி செய்யும் வகையில் ஊழியர்களை பணி அமர்த்த வேண்டும்.

தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை போதிய இடைவெளியில் ஆய்வக பரிசோதனை செய்து அறிக்கை வைத்திருக்க வேண்டும்.

முறையாக பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

நட்சத்திர ஓட்டல்களில் உணவகம் நடத்த உணவு பாதுகாப்பு உரிமம் பெறிருக்க வெண்டும்.

ஓட்டலில் வாடிக்கையாளரின் கண்ணில் படுமாறு உணவு பாதுகாப்பு குறித்த பதாகைகளை வைத்திருக்க வேண்டும்.

தேவையான உணவை மட்டும் தயார் செய்து, உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை பறிமாற வேண்டும்.

உணவு பொருளை கையாளுபவர்களுக்கு, பாதுகாப்பான முறையில் உணவை கையாளும் பயிற்சி அளித்திருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வேண்டும்.

5 ஸ்மைல்

இப்படி 10 வகையான வழிமுறைகளை நட்சத்திர ஹோட்டல்கள் கையாளும் பட்சத்தில், ஆய்வுக்குப்பின் அந்த ஹோட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் 5 ஸ்டாருக்கு இணையான 5 ஸ்மைல் சான்றிதழ் வழங்கப்படும்.

அமலாக்கத்துறை ஆய்வு

ஐந்து மற்றும் நான்கு ஸ்மைல்-க்கு குறைவாக பெற்றிருக்கும் ஹோட்டல்களுக்கு, உணவு பாதுகாப்பு மேம்படுத்தும் சட்டம் 32 படி நோட்டீஸ் வழங்கப்படும்.

மேலும் உணவு பாதுகாப்புத்துறையின் அமலாக்கத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். நட்சத்திர ஓட்டல்களில் மிச்சமாகும் உணவை தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிட வேண்டும்.

புகார் எண்கள் :

நட்சத்திர ஓட்டல்கள் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் 90877 90877 என்ற எண்ணிலோ, 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிலோ தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் www.fssai.gov.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி ஹோட்டல் உரிமையாளர்கள் உரிமத்தை பதிவு செய்து கொள்ளவும் அதில், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!