திரைப்பட தேசிய விருது அறிவிப்பு!

திரைப்பட தேசிய விருது  அறிவிப்பு!

64வது தேசிய விருதுகளை, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான பிரியதர்சன் டெல்லியில் இன்று அறிவித்தார். அதன்படி, ருஸ்தம் என்கிற இந்திப் படத்தில் நடித்த அக்சய் குமாருக்குச் சிறந்த நடிகருக்கான விருதை அறிவிக்கப்பட்டது. ‘மின்னாமினுங்கு’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் நடித்த சுரபி லட்சுமி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெண்டிலேட்டர் என்கிற மராத்திப் படத்தை இயக்கிய ராஜேஷ் மாபூஸ்காவுக்குச் சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் நடிகை ‘பிரியங்கா சோப்ரா’ என்பது குறிப்பிடத் தக்கது.

award apr 7

சமூகச் சிக்கல்கள் குறித்த சிறந்த படமாக அமிதாப் பச்சன் நடித்த பிங்க் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக மராத்தி மொழியில் வெளியான காசவ் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

இந்தி மொழியில் சிறந்த படமாக நீர்ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரைப்படத் தொழிலுக்கு மிகவும் உகந்த மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த திரைப்பட விமர்சகருக்கான விருது தனஞ்சயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் சிறந்த படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் பாடிய சுந்தர ஐயருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’ படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு நிர்வாகத்திற்காக இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. மேலும், தர்மதுரை படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது என்பது வைரமுத்து இத்துடன் ஏழாவது முறை தேசிய விருது பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!