சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள  “வெள்ளையானை”!

இயக்குனர் சுப்ரமணியம் சிவா 2003 ல்  இயக்குனராக அறிமுகமானார் .நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருடா திருடி சூப்பர் ஹிட் திரைப்படம் . அதனை தொடர்ந்து பொறி , யோகி , சீடன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை ,அசுரன் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார் .தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனியை வைத்து  இயக்கியுள்ள படம் வெள்ளையானை. 

இந்த வெள்ளையானை திரைப்படத்தை “WHITE LAMP TALKIES ” தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார் தயாரிக்கிறார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை  ஆத்மியா  நடித்துள்ளார் .ஆத்மியா தமிழில் மனங்கொத்தி பறவை எனும் படத்தில் அறிமுகமாகினார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும்  உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

படத்தொகுப்பு – AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் ,  ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த  விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின்  தம்பி  தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

தொழில்நுட்பக்குழு :
எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – S .வினோத்குமார்
கலை இயக்கம் –  ஆ .ஜெகதீசன்
ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி
சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – நாகு
மேக்கப் – A .சரவணகுமார் , B. ராஜா
விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது 

error: Content is protected !!