ஆதார் விவகாரம் & காஷ்மீர் ஆட்சி + முத்தலாக் சட்டம் ! – மோடி அமைச்சரவை அதிரடி!

ஆதார் என்ற வார்த்தை நம் நாட்டில் ஒலிக்க அரம்பித்த நாளிலிருந்து அதன் மீதான ப்ளஸ் & மைனஸ் தகவல்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் இனி ஆதார் எண்ணை ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் வங்கிக் கணக்குகளைத் துவக்குவதற்கும், மொபைல் போன் எண் இணைப்பை பெறுவதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை திருத்த மத்திய அமைச்சரவை மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. இந்த திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவையின் இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படி யென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும் என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால்?  லைசென்ஸ்,  பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமை யான ஒன்று என்பதுதான் இதில் ஒரே ஆறுதலான விஷயம்.இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம்,

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஆதார் திருத்த மசோதா அமைச்சரவையின் பரிசீலனைக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அமலில் உள்ள ஆதார் அவசரச் சட்டத்துக்கு பதிலாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

அத்துடன் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் தந்தது. ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி 2018ம்ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதியோடு ஓராண்டு காலம் நிறைவடைவதால் அதனை நீடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் மத்திய அமைச்சரவை ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஒப்புதல் வழங்கியது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கப்படும்.

குடியரசுத் தலைவர் மத்திய அரசின் தீர்மானத்தை ஏற்று ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த புதிய அறிவிப்பினை வெளியிடுவார். அந்த அறிவிப்பை தொடர்ந்து ஜூலை 3ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் தந்தது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதா காலாவதி ஆகி விட்டதால் புதிய மசோதா தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிவுகளை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.