January 28, 2022

எவரெஸ்ட் சிகரத்தை அடைய முறையான பயிற்சிகள் தேவை என்கிறார் டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா குப்தா.

கடந்த மே மாதம் 22-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு வந்த திகில் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஆதித்யா குப்தா.

எவரெஸ்ட் மலையில் ஏற முயற்சித்த அஞ்சலி என்ற பெண் இறந்துபோனார். அஞ்சலியின் உடலை கீழே கொண்டு வரும் பணியில் அவரது கணவர் ஈடுபட்டார்.

மருத்துவமனையில் சாவதைவிட மலையில் சாவதே மேல் என்று அவர் மனைவி நகைச்சுவையாக கூறுவாராம். இந்த வார்த்தை உண்மையாகும் என்று யார் அறிவார்.

ஒரு சில மலைகளில் ஏறவிட்டாலே, எவரெஸ் சிகரத்தில் ஏறிவிடமுடியாது. இது ஒரு நீண்ட கால திட்டமிடல். நான் என் எடையை குறைத்தேன். 29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்து என் உடலை தயார்படுத்திக் கொண்டேன்.