மோடி அமைச்சரவையில் யாருக்கு? எந்த இலாகா? பக்கா பட்டியல் இதோ!

மோடி அமைச்சரவையில் யாருக்கு? எந்த இலாகா? பக்கா பட்டியல் இதோ!

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. ஆனால் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த மேனகா காந்தி, சுரேஷ் பிரபு, ராதா மோகன் சிங் உள்ளிட் டோருக்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. புதிய அமைச்சரவையில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி ஆகியோரும் இடம்பெறவில்லை. இதேபோல் மத்திய இணையமைச்சர்களாக இருந்த ரத்தோர், ஜெயந்த் சின்ஹா, அனந்த்குமார் ஹெக்டே உள்ளிட்டோருக்கும் இம்முறை பதவி வழங்கப்படவில்லை. பாஜகவின் மூத்த நிர்வாகியான மேனகா காந்தி, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் ஜே.பி.நட்டா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பதவி ஏற்ற மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

அந்த அறிவிப்பின்படி முதல் முறை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது,. அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு நிதி அமைச்ச கமும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவையில் பிரதமரை தவிர்த்து மொத்தம் 57 அமைச்சர் கள் உள்ளனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும்,9 பேர் தனி பொறுப்புகள் வழங்கப் பட்ட இணை அமைச்சர்களாகவும் மீதி 24 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் பணியாளர், பொதுமக்கள் குறைபாடு, ஓய்வூதியத் துறை, அணுசக்தி துறை, விண்வெளித்துறை, மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் உள்ளன. பிரதமர் மோடி தானே அத்துறைகளை கவனித்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு துறை ஒன்றிணைக்கப்பட்டு ‘ஜல் சக்தி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான இலாகாக்களின் விவரம் வருமாறு:

கேபினட் அமைச்சர்களின் விவரம்

கேபினட் அமைச்சர்களின் விவரம்

அமைச்சர்கள் பெயர்

இலாகா

1 ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை
2 அமித் ஷா உள்துறை அமைச்சகம்
3 நிதின் கட்கரி சாலை போக்குவரத்து துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்கள்.
4 சதானந்த கவுடா உரங்கள், மற்றும் ரசாயனத்துறை
5 நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சகம்
கார்ப்பரேட் விவகாரங்கள் துறை
6 ராம்விலாஸ் பஸ்வான் நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகத்துறை
7 நரேந்திர சிங் தோமர் விவசாயம், விவசாயிகள் நலன்,
கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகள்
8 ரவிசங்கர் பிரசாத் சட்டம்,  தகவல் தொடர்பு,
எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பத் துறை
9 ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் துறை
10 தாவர் சந்த் கெஹ்லாட் சமூகநீதி, அதிகாரம்அளித்தல் துறை
11 டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை
12 ரமேஷ் போக்ரியால் நிஷாங் மனித வள மேம்பாட்டுத்துறை
13 அர்ஜுன் முண்டா பழங்குடியினர் விவகாரத்துறை
14 ஸ்மிருதி ஜூபின் இரானி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை,
ஜவுளித்துறை
15 டாக்டர் ஹர்ஷவர்தன் சுகாதாரம், குடும்ப நலத்துறை
அறிவியல், தொழில்நுட்பத் துறை
புவி அறிவியல் துறை
16 பிரகாஷ் ஜாவ்டேகர் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம்,
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
17 பியூஷ் கோயல் ரயில்வே,வர்த்தகம், தொழில்துறை
18 தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை,
இரும்பு உருக்கு அமைச்சகம்
19 முக்தர் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் விவகாரத்துறை
20 பிரஹலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரம்.
நிலக்கரி, சுரங்கங்கள் அமைச்சகம்
21 டாக்டர் மகேந்திர நாத் பாண்டே திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
22 அரவிந்த் கண்பத் சாவந்த் கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள்
23 கிரிராஜ் சிங் கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை, மீன்வளத்துறை
24 கஜேந்திர சிங் ஷெகாவத் ஜல் சக்தி அமைச்சகம்

 

 

அமைச்சர்கள் பெயர்

இலாகா

1 சந்தோஷ் குமார் கங்வார் தொழிலாளர், வேலைவாய்ப்பு
2 ராவ் இந்தர்ஜித் சிங் புள்ளியியல், திட்ட அமல்,
3 ஸ்ரீபாத் யெசோ நாயக் ஆயுஷ் அமைச்சகம்,
பாதுகாப்பு அமைச்சகம்
4 டாக்டர் ஜிதேந்திர சிங் வடகிழக்கு பிராந்தியம் மேம்பாடு,
பிரதமர் அலுவலக இணையமைச்சர்,
பணியாளர், பொதுமக்கள் குறைபாடு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை
5 கிரண் ரிஜ்ஜு இளைஞர்கள் விவகாரம், விளையாட்டு துறை,
சிறுபான்மையினர் விவகாரத்துறை
6 பிரஹலாத் சிங் படேல் கலாச்சாரம், சுற்றுலாத்துறை
7 ராஜ் குமார் சிங் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை,திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை
8 ஹர்தீப் சிங் பூரி வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை,
சிவில் விமான போக்குவரத்து,
வர்த்தகம் மற்றும் தொழில்துறை
9 மன்சுக்.எல்.மாண்டவியா கப்பல் போக்குவரத்து துறை,
ரசாயன்ங்கள், உரங்கள் துறை

இணை அமைச்சர்கள் 

 

அமைச்சர்கள் பெயர்

இலாகா

1 பகன்சிங் குலாஸ்தே உருக்கு இரும்பு அமைச்சகம்
2 அஸ்வினி குமார் சவுபே சுகாதாரம், குடும்ப நலத்துறை
3 அர்ஜுன் ராம் மெக்வால் நாடாளுமன்ற விவகாரம்,
கனரக தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள்.
4 ஜெனரல் வி.கே. சிங் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை
5 கிருஷ்ணன் பால் சமூக நீதித்துறை, அதிகாரமளிப்பு
6 தான்வே ராவ்சாஹேப் தாதாராவ் நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகத்துறை
7 ஜி. கிருஷ்ணன் ரெட்டி உள்துறை அமைச்சகம்
8 பர்ஷோத்தம் ரூபாலா விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
9 ராம்தாஸ் அத்வாலே சமூக நீதித்துறை, அதிகாரமளிப்பு
10 சாத்வி நிரஞ்சன் ஜோதி கிராமப்புற மேம்பாட்டுத்துறை
11 பாபுல் சுப்பிரியோ சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்றம்
12 சஞ்சீவ் குமார் பல்யான் கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை,. மீன்வளத்துறை
13 தோத்ரே சஞ்சய் சாம்ராவ் மனித வள மேம்பாடு,
தகவல் தொடர்பு அமைச்சகம்
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
14 அனுராக் சிங் தாகூர் நிதி அமைச்சகம்,
கார்ப்பரேட் விவகாரங்கள் துறை
15 அங்காடி சுரேஷ் சன்னாபசப்பா ரயில்வே அமைச்சகம்
16 நித்தியானந்த் ராய் உள்துறை அமைச்சகம்
17 ரத்தன் லால் கட்டாரியா ஜல் சக்தி அமைச்சகம், சமூக நீதித்துறை, அதிகாரமளிப்பு
18 வி. முரளிதரன் வெளியுறவுத்துறை,
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
19 ரேணுகா சிங் சருதா பழங்குடியினர் விவகாரங்கள் துறை
20 சோம் பிரகாஷ் வர்த்தகம் மற்றும் தொழில்துறை
21 ராமேஸ்வர் டெலி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் துறை
22 பிரதாப் சந்திர சாரங்கி சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை,
கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை, மற்றும் மீன்வளத்துறை
23 கைலாஷ் சவுத்ரி விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை
24 சுஷ்ரி தீபஸ்ரீ சவுத்ரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

 

மத்திய அமைச்சரவை கூட்டம்

புதிதாக பதவி ஏற்று கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட பிறகு  மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

 

Related Posts

error: Content is protected !!