December 8, 2021

🦉அண்மையில் இக்குரூப்-பில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஒய்ஃப் பேசிய ஒரு வீடியோ சிலருக்கு நினைவிருக்கும்.. விஜய்காந்தின் பர்சனல் போட்டோகிராபரான முத்து என்பவரைக் குறித்து சிலாகித்து பேசி இருப்பார்..

அப்பேர்ப்பட்ட முத்து நடத்தும் ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு (கே கே நகர் அமுதல் அருகில்) போ என் மகன் & எனக்கு கொஞ்சம் பேங்க் பர்பஸூக்காக போட்டோ எடுத்தேன்

எடுத்து விட்டு எம்புட்டு என்று கேட்டால் ரோட் சைட் காய்கறிகாரர் பாணியில் முணுமுணுத்து விட்டு 400 என்று சொல்லி வாங்கி விட்டார்..

கொடுத்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பும் போதுதான்

எட்டு + எட்டு பாஸ்போர்ட் போட்டோ (அதிகப்பட்சம்) = 160
நானும் என் மகனும் இணைந்து எடுத்த போட்டோ = 100

=260 தானே என்று யோசித்து ஆட்டோ-வை யூ டர்ன் அடித்து அந்த முத்து ஸ்டூடியோ போய் கேட்டால் 2 செட் பாஸ்போர்ட் 200 + ஃபேமிலி போட்டோ 3க்கு 200-ன்னு பில் குடுத்தாச்சு..

போய்யா.. போய் சம்பாதிக்கற வழியைப் பாரு-ன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டாய்ங்க

ஹூம்ம்.. இதையெல்லாம் விஜய்காந்த்-திடம் சொன்னாலும் ஒரு பிரயோஜனம் இல்லே-ன்னாலும் இந்த தேமுதிக நிறுவனரின் முதல் பேட்டி தொடங்கி சுமார் எழுபது ஸ்பெஷல் கவர் ஸ்டோரி எடுத்த எனக்கே இந்த நிலைமை என்றால்..

நல்ல வேளை கடவுள் இருக்கான் என்று மட்டும் சொல்ல தோணுது