மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு! – அதனால் என்ன விளைவு??

இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி என அறிவிக்கக் கோரி சர்வதேச முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. 2009, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் மூன்று முறை இந்தியாவின் கோரிக்கைக்கு சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்ட  நிலையில் ஐநா பாதுகாப்பு குழு பாகிஸ்தான் தீவிரவாதியான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பு ஏற்றது. உலக நாடுகள் பலவும் அந்த இயக்க தலைவன் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி உள்ளது. அதனால் ஐநா பாதுகாப்பு சபையிடம் இந்தியா மற்ற நாடுகள் சார்பில் கோரிக்கை ஒன்றை அளித்தது. அந்த கோரிக்கையில் ஜெய்ஷ் ஈ முகது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசார் சர்வதேச பயங்கர வாதியாக அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு ஏற்கனவே இரு முறை அளித்த கோரிக்கைகள் சீனாவின் ஒப்புதல் இல்லாததால் நிறை வேற்றப் பட முடியாமல் போனது. தற்போது சீனா இந்த கோரிக்கைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் தனது எதிர்ப்பை சீனா விலக்கிக் கொண்டதால் ஐநா பாதுகாப்பு குழு மசூத் அசார் ஒரு சர்வதேச பயங்கரவாதி என அறிவித்துள்ளது.

மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

1)அசாருக்கு சம்பந்தமான அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள உலக நாடுகள் அனைவரும் உடனடியாக முடக்க வேண்டும்.

2) இனி மசூத் அசார் தங்களது நாட்டிற்குள் நுழைய அசாருக்கு தடை விதிக்க வேண்டும். மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தங்கள் நாட்டு எல்லை அசார் பயன்படுத்துவதையும் ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் தடை செய்ய வேண்டும்.

3) தங்கள் நாடுகளில் இருந்து நேரடியாகவோ, மறைமுகவோ மசூத் அசாருக்கு இயக்கத்திற்கு விற்கப்படுவதையோ அல்லது தங்கள் நாட்டின் எல்லை வழியாக செல்வதையோ தடுக்க வேண்டும்

4) மசூத் அசார் மீதான தடை எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை இதற்காக நியமிக்கப்பட்ட குழு ஆண்டு தோறும் ஐநா பாதுகாப்பு சபைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும்

5) மசூத் அசாருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து அசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. அசார் தொடர்பான தீவிரவாத இயக்கம், அமைப்பு அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும்..