சுமார் 26 கோடி மக்கள் வாழும் இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர். அருகாமையில் உள்ள நகர்ப்புறங்களில் சுமார் 3 கோடி மக்கள் வசிப்பதாக மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தற்போதுள்ள பெருநகரங்களில் மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும் புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசியா அரசு தீர்மானித்துள்ளது.

இதில் முதல்கட்டமாக இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

error: Content is protected !!