பல கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த ஜன்னல் சமூகத்தின் சாளரம் என்ற டைட்டில் ஏன் என்பது தொடங்கி அந்த ஜன்னலில் தங்கள் வாழ்க்கையை அடகு வைத்து உழைத்து வந்த நிலையில் என்ன பிரச்னை வந்தது? அதனால் அலெர்ட் ஆறுமுகமாகி யாரெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்கள்? அதே சமயம் இதே ஜன்னல் நிர்வாகத்தால் த்யன் குடும்ப வாரிசு கல்வியை இழந்தது யார்? ஹார்ட் ஆப்ரேசன் செய்தது யார்? ஹாஸ்பிட்டலைஸ் ஆனது எத்தனை பேர் என்பதை எல்லாம் கொஞ்ச்ம் விரிவாக விளக்கமாக சொல்வதன் மூலம் இந்த ஜன்னலை ஓப்பன் செய்த நிர்வாகிகளுக்கு தன்னிலை விளக்கம் சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் புதிதாக இந்த ஜர்னலிஸ்ட் முதலாளியாக வர ஆசைப்படும் யாரோ ஒருவருக்கு சாளரமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

முன்னரே சொன்னது போல் மூன்று காலால் நடக்கும் என் எழுத்தில் எழுத்துப் பிழை, சொல் பிழை., இன்ன பிழை இருக்கலாம். அது மாதிரியான என் போன்ற ஜர்னலிஸ்டுகளின் புரூஃப்களை திருத்துவோரெல்லாம் இப்போது கண்டெண்ட் எடிட்டர் ஆகி விட்டதால் இதை படிக்கும் ஒவ்வொருவருமே என் தவறை சுட்டிக் காட்டி நாளைய ஜர்னலிஸ்டுகளுக்கு வழிக் காட்டுன்ங்கள்..

இனி வாரமிருமுறை

ஜன்னல் சமூகத்தின் சாளரம் என்ற மஹா சமுத்திரத்தில் என் பங்களிப்பை இதே பக்கத்தில் வழங்க ஆயத்தமாகிறேன்

அன்புடன்

ஆந்தையார்